ETV Bharat / bharat

குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்: பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு! - budget 2024 - BUDGET 2024

NPS Vatshalya: 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தில் சேரும் படி புதிய அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (GFX - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 1:21 PM IST

டெல்லி: 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) 18 வயதுக்கு மேற்பட்டவர்களே பயனாளிகளாக சேர முடியும். இந்த நிலையில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

'என்.பி.எஸ். வாத்சல்யா' (NPS Vatshalya) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் தங்களது பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர் அல்லது அவர்களின் பாதுகாப்பாளர்கள் அவர்களின் கணக்கில் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் சேர்க்கப்படும் சிறார்கள், 18 வயதை அடைந்ததும் 'என்.பி.எஸ். வாத்சல்யா' திட்டத்தின் கீழ் இருக்கும் அவர்களது ஓய்வூதிய கணக்கை தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான ஓய்வூதிய கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம்.

அரசு ஊழியர்கள் தொடர்பான தேசிய ஓய்வூதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி; மாசம் எவ்வளவு ஊக்கத்தொகை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.