ETV Bharat / bharat

"தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை... மத்திய அரசு உத்தரவிட்டாலும்..."- சித்தராமையா! - No water to tamil nadu Siddaramaiah

Karnataka CM Siddaramaiah: தமிழ்நாடு அரசு கேட்டாலும், மத்திய அரசு உத்தரவிட்டாலும் கூட காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

Siddaramaiah
Siddaramaiah
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 1:00 PM IST

Updated : Apr 3, 2024, 3:26 PM IST

சாம்ராஜ்நகர் : கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அடுத்த ஹெக்கவாதி கிராமத்தில் செய்தியாளர்களிடையே பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்திற்கு ரகசியமாக காவிரியில் இருந்து தண்ணிர் திறந்து விட முடியாமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் காவிரியில் போதிய தண்ணீர் இல்லாத போது பாஜக உள்ளிட்டோர் பொய் பிரசாரம் செய்து வருவதாக கூறினார்.

கர்நாடாகவில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அரசும் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை என்றும் சித்தராமையா தெரிவித்தார். தமிழக அரசு கேட்டாலும், மத்திய அரசு உத்தரவிட்டலும், தமிழகத்துக்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தண்ணீர் கொடுங்கள் என்று யார் சொன்னாலும் நாங்கள் தண்ணீர் கொடுப்பதில்லை என்றும் சித்தராமையா கூறினார்.

முன்னதாக, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார், தமிழகத்திற்கு சொட்டுத் தண்ணீர் திறக்க முடியாது என்றும் தண்ணீர் திறந்து விட நாங்கள் முட்டாள் இல்லை என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறித்த விவரங்கள் உள்ளதாகவும், தற்போது தண்ணீர் திறந்து விட்டாலும் தமிழகத்தை காவிரி நீர் சென்றடைய நான்கு நாட்கள் ஆகும் என்றும் டி.கே சிவக்குமார் தெரிவித்து இருந்தார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றும் சிவக்குமார் கூறி இருந்தார்.

மாண்ட்யா மாவட்டத்தில் நடைபெற்ற ரைதா ஹித்ரக்‌ஷனா சமிதி திட்ட விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் இதனை தெரிவித்தார். முன்னதாக கர்நாடகாவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், காவிரியில் இருந்து கேஆர்எஸ் அணையில் தமிழகத்திற்கு ரகசியகமாக மாநில அரசு தண்ணீர் திறந்துவிடுவதாக மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகள் மூடு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க : சனாதன தர்மம் விவகாரம்: அமைச்சர் உதயநிதிக்கு பீகார் நீதிமன்றம் சம்மன்!

Last Updated : Apr 3, 2024, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.