ETV Bharat / bharat

"நாடு முழுவதும் மதுவிலக்கு... உங்கள் அறிவுரையை ஸ்டாலினிடம் கூறுங்கள்" - மக்களவையில் நிர்மலா - திருமாவளவன் காரசார விவாதம்! - Nirmala Sitaraman Thirumavalavan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 7:20 PM IST

நாடு முழுவதும் மது விலக்கு கொள்கையை அமல்படுத்தக் கோரி மக்களவையில் திருமாவளவன் தெரிவித்த நிலையில் இந்த அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் முதலில் கூறுங்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Etv Bharat
Nirmala Sitaraman - Thirumavalavan (Sansad TV)

டெல்லி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது அவர், மக்களவை தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது என்ற தவறான தகவலை குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தலைமையிலான கூட்டணி கட்சி ஜனநாயகத்தை அழிக்க துடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க திட்டமிட்டுள்ளதாக மக்களிடம் கூறியதாகவும் அதன் காரணமாக 234 இடங்களில் எதிர்க்கட்சிகளை வெற்றி பெற வைத்ததன் மூலம் மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டி உள்ளதாக கூறினார்.

பல் இல்லாத பாம்பைப் போல, கொம்பு இல்லாத மாட்டை போல வலுவில்லாத பாஜக அவையில் அமர்ந்துள்ளதாக கூறினார். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அமைப்பை கலைக்க வேண்டும் என்றும் நீட் தேர்வை தேசிய அளவில் முழுமையாக நீக்க வேண்டும் என்றார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு சட்டமன்றம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இதுவரை அதுகுறித்து பொருட்படுத்தவில்லை என்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை அவமதிக்கும் செயல் இது என்றும் திருமாவளவன் கூறினார். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 47ல் நாடு முழுவதும் போதைப் பொருள், சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேநேரம் அதே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 44 பிரிவை கையில் எடுத்துக் கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசு, 47 பிரிவில் கூறப்பட்டுள்ள மது ஒழிப்பை ஏன் பொருட்படுத்தவில்லை என்று கூறினார். இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி தான் வேதனை அடைவதாகவும் தேசிய மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும் நாடு முழுவதும் மது விலக்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

இதையடுத்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பை, மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்பதை வரவேற்பதாகவும் அதேநேரம் திருமாவளவன் கூட்டணியில் உள்ள திமுக ஆளும் தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை அருந்தி 56 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், உங்கள் அறிவுரைகளை முதலில் தமிழக முதலமைச்சருக்கு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்றும் அதுகுறித்து தமிழக முதலமைச்சர் அறிவுரை வழங்குகள் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிகம், காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் பாஜக இரண்டாவது இடம்"- மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு! - PM Modi Speech in Parliament

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.