ETV Bharat / bharat

ரூ.3 லட்சம் வரை வரியில்லை.. பட்ஜெட்டில் வருமான வரி குறித்த அறிவிப்பு என்ன? - BUDGET 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 1:07 PM IST

Updated : Jul 23, 2024, 2:03 PM IST

புதிய வருமான வரி முறையில் வரி செலுத்துவோருக்கு தற்போதைய சலுகை மூலம் 17 ஆயிரத்து 500 ரூபாய் வரை சலுகை கிடைக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

பட்ஜெட் 2024
பட்ஜெட் 2024 (GFX - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை.23) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை.23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி,

ரூ.3 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை

ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5 % வரி விதிப்பு

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 % வரி விதிப்பு

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 % வரி விதிப்பு

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 % வரி விதிப்பு

ரூ.15 லட்சத்திற்கு மேல் 30% வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

புதிய வருமான வரி அடுக்குகளின் கீழ் நிலை கழிப்பு தொகை சம்பளதாரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய வருமான வரி முறையில் வரி செலுத்துவோருக்கு தற்போதைய சலுகை மூலம் 17 ஆயிரத்து 500 ரூபாய் வரை சலுகை கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் சிறப்பு நிதி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல் - UNION BUDGET 2024

Last Updated : Jul 23, 2024, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.