ETV Bharat / bharat

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: இருவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்! - Rameshwaram Cafe Blast - RAMESHWARAM CAFE BLAST

Rameshwaram Cafe Blast: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரு முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால், தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 2:22 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடித்தது. இதில், உணவகப் பணியாளர்கள் உட்பட பலர் காயமுற்றனர். இந்த சம்பவம் பெங்களூரு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடுப்பு சம்பவம் தொடர்பான வழக்கை கடந்த மார்ச் 3ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency - NIA) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதைத் தொடர்ந்து, இத்தகைய பயங்கரவாத செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்கும் பணியில், என்ஐஏ அதிகாரிகளும், பெங்களூரு காவல்துறையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இச்சம்பவம் தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சில நபர்களைத் தேடும் பணியிலும், ஏற்கனவே இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக கோணத்திலும், பல்வேறு புகைப்படங்களை ஒப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய குற்றவாளியான முசாவிர் ஹுசைன் ஷாஜிப் மற்றும் வேறு சில வழக்குகளில் ஏஜென்சியால் தேடப்படும் மற்றொரு குற்றவாளியான அப்துல் மதீன் அகமது தாஹாவையும், என்ஐஏ ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. ஆனால், இவர்கள் இருவருமே தற்போது வரை தலைமறைவாக உள்ளனர்.

ஆகவே, குண்டுவெடுப்பு சம்பவத்தில் தொடர்புடைய இந்த முக்கிய குற்றவாளிகளான முசாவிர் ஹுசைன் ஷாஜிப் (30) மற்றும் அப்துல் மதீன் அகமது தாஹா (30) ஆகியோரைப் பிடிக்க, உதவக்கூடிய தகவல்கள் தெரிந்தால் பகிருமாறு, பொதுமக்களிடம் என்ஐஏ கோரியுள்ளது.

அந்த வகையில், குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இந்த இரண்டு முக்கிய குற்றவாளிகள் பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கு, தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த வெகுமதி அறிவிப்புடன், குற்றவாளிகள் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

Rameshwaram Cafe Blast
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு

1. முசாவிர் ஹுசைன் ஷாஜிப் (30):

நிறம்: சிவப்பு (Fair Complexion),

உயரம்: 6.2 அடி,

முடி: கருப்பு நிறம்.

நேரான ஹேர் ஸ்டைல், கையில் கருப்பு நிற ஸ்மார்ட் வாட்ச், ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் ஷர்ட் ஆடை அணிந்துள்ளார். பெரும்பாலான நேரம் முகமூடி அணிந்தும், சில நேரங்களில் விக் மற்றும் போலி தாடியுடனும் இருப்பார். முகமது ஜுனைத் சையத் அல்லது வேறு பெயரில் போலியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பார்.

Rameshwaram Cafe Blast
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு

2. அப்துல் மதீன் அகமது தாஹா (30):

நிறம்: மாநிறம் (Wheatish Complexion),

உயரம்: 5.5 அடி,

முடி: தலையின் முன்புறம் முடி இல்லை.

ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் ஷர்ட், தொப்பி ஹூடீஸ் (Caped Hoodies) அணிந்துள்ளார். சில நேரங்களில் முகமூடி, விக் மற்றும் போலி தாடி அணிந்திருப்பார். விக்னேஷ் என்ற பெயரில் ஆதார் உள்ளிட்ட பிற ஆவணங்களை வைத்து, தன்னை இந்துவாக காட்டிக் கொள்கிறார்.

இந்நிலையில், மேற்கண்ட அடையாளங்களில் இருக்கும் நபர்களைக் கண்டால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும், குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள், ரகசியமாக வைக்கப்படும் எனவும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, இந்த குண்டுவெடுப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டிய என்ஐஏ குழுக்கள், கர்நாடகா, தமிழ்நாடு, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மொத்தமாக 18 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது தேடப்பட்டு வரும் இரு முக்கிய குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்கிய, முஸம்மில் ஷரீப் என்பவரை கடந்த வியாழக்கிழமை (மார்ச் 28) என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், துணை குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள இந்த முஸம்மில் ஷரீப் தான், கஃபே குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அவர்களுடன் இணைந்து நாசவேலையை செய்ய திட்டமிட்டதாகவும், தற்போது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவரும், சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்பட்டுவரும் அப்துல் மதீன் அகமது தாஹாவும், 10ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தகாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவரிடம் மேல் விசாரணை நடத்த, என்ஐஏ அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து, என்ஐஏ மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும், முஸம்மில் ஷரீப்பை 7 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறையின் தொடரும் ஆம் ஆத்மி வேட்டை! டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்! - Kailash Gahlot

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.