ETV Bharat / bharat

கூட்டணிக் கட்சிக்கு போட்டியாக களமிறங்கிய நவாப் மாலிக்.. சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்!

மகாயுதி கூட்டணியில் இருந்துகொண்டே பாஜகவுக்கு எதிராக அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் நவாப் மாலிக் களமிறக்கப்பட்டுள்ளார்.

நவாப் மாலிக்
நவாப் மாலிக் (Credits - Nawab Malik 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 5:23 PM IST

மும்பை: 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து, அக்டோபர் 22 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது.

இதனையடுத்து, நவம்பர் 4 வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதுவரை 7 ஆயிரத்து 995 வேட்பாளர்களிடம் இருந்து 10 ஆயிரத்து 905 வேட்புமனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவ் சேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ் சேனா (UBT), சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (SCP) மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஷ் அகாடி களத்தில் உள்ளனர். இதனால் இருமுனை போட்டியே நிலவுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா நகர்ப்புறத்தில் உள்ள மான்குர்ட் சிவாஜி நகர் சட்டமன்றத் தொகுதியில் மகாயுதி கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவ் சேனா தரப்பில் சுரேஷ் கிருஷ்ணா படில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன்படி, அவர் தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நவாப் மாலிக் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து உள்ளார்.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு எனத் தகவல்

இதனால் மகாயுதி என்ற ஒரே கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது மும்பை அரசியலில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. மேலும், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நவாப் மாலிக், “நான் இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மான்குர்ட் சிவாஜி நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளேன். சுயேட்சை வேட்பாளராகவும் நான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். எனது கட்சி எனக்கான வேட்பாளர் விண்ணப்பத்தை அனுப்பியது. இதனையடுத்து, பிற்பகல் 2.55 மணிக்கு வேட்புமனுவை சமர்பித்தேன். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நான் உள்ளேன்” எனக் கூறினார்.

அதேநேரம், நவாப் மாலிக்கின் மகள் சனா மாலிக், தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அனுசக்தி நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். முன்னதாக, பாஜகவின் அழுத்தத்தால் நவாப் மாலிக்கிற்கு இடம் ஒதுக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 122, சிவ் சேனா 63 மற்றும் காங்கிரஸ் 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல், 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105, சிவ் சேனா 56 மற்றும் காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேலும், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.