டெல்லி : ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கும் திட்டம் இல்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்து உள்ளார். எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய மாநாட்டு கட்சி யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் தனித்து போட்டியிட உள்ளதை தெளிவாக தெரிவிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.
மேலும், மக்களவை தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் தேர்தலும் நடத்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாக பரூக் அப்துல்லா கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் கட்சியாக தேசிய மாநாட்டு கட்சி வெளியேறி இருப்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்து உள்ளன.
இந்தியா கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வரும் சூழலில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்படும் என்பது போல் கூறப்படுகிறது. இருப்பினும், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க : தேர்தல் பத்திர திட்டம் என்றால் என்ன? எதற்காக எதிர்ப்பு? - முழு விவரம்!