ETV Bharat / bharat

வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்கள்; 3 பேர் உயிரிழந்த சோகம்! என்ன நடந்தது? - MUMBAI CYLINDER BLAST

மும்பை அருகே மளிகைக் கடை ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் தாய், மகள் உள்பட ஒரே குடும்பத்தில் இருந்து மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

MUMBAI CYLINDER BLAST 3 LOST LIVES ONE SERIOUSLY INJURED
மும்பை அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 1:00 PM IST

மும்பை: மும்பை பகுதியில் உள்ள ஜாவ்லே கிராமத்தில் நேற்று (அக்டோபர் 30) தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. ஆனால், ஒரு கிராமத்திற்கு மட்டும் அது சோக இரவாக மாறியிருக்கிறது. இங்குள்ள மளிகைக் கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தாய், மகன், மகள் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகப் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து கிலோ எடையுள்ள மூன்று சிலிண்டர்கள் வெடித்ததில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையும் படிங்க
  1. கேரள முதலமைச்சர் சென்ற கார் விபத்து.. அடுத்தடுத்து மோதிய பாதுகாப்பு வாகனங்கள்!
  2. ரூ.8 கோடி சொத்திற்காக கணவனை கொன்று கர்நாடவில் வீசிய பெண்.. தெலுங்கானவில் கைதானது எப்படி?
  3. பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? முக்கிய வழிமுறைகள்!

காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கடையில் திருட்டுத்தனமாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இதன் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், எதனால் விபத்து நிகழ்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Tamil Nadu
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.