டெல்லி: 18வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இடைக்கால் சபாநாயகராக சிறப்பாக பணியாற்றிய ஒடிசா பாஜக எம்பி பரத்ருஹரி மஹ்தாபுக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்தார். மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் அமர வைத்தனர்.
#WATCH | BJP MP Om Birla occupies the Chair of Lok Sabha Speaker after being elected as the Speaker of the 18th Lok Sabha.
— ANI (@ANI) June 26, 2024
Prime Minister Narendra Modi, LoP Rahul Gandhi and Parliamentary Affairs Minister Kiren Rijiju accompany him to the Chair. pic.twitter.com/zVU0G4yl0d
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த 24ஆம் தேதி கூடியது. தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த தீர்மானத்தை வழிமொழிந்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் லல்லான் சிங்ம் ஜித்தன் ராம் மஞ்சி, அமித் ஷா, சிராக் பஸ்வான், எச்டி குமாரசாமி, ராம் மோகன் நாயுடு ஆகியோரும் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்தனர்.
#WATCH | NCP-SCP MP Supriya Sule says, " ...a lot has been done. in 5 years, you have done very good work. but when 150 of my colleagues were suspended, we were all saddened. so, it should be an effort to see that you do not think of suspension in the next 5 years. we are always… pic.twitter.com/MlF1g6g9dM
— ANI (@ANI) June 26, 2024
அதேநேரம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் 8 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வான கேரள காங்கிரஸ் எம்பி கே.சுரேஷ் தேர்வு செய்வதற்கான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்மானத்தை சிவ சேனா உத்தவ் தாக்ரே அணியின் எம்பி அரவிந்த் கன்பத் சாவந்த், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆனந்த் பதூரியா, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் வழிமொழிந்தனர்.
இதையடுத்து நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யபப்ட்டார். தொடர்ந்து, துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மரபு படி துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். கடந்த முறை துணை சபாநாயகராக ஆளுங்கட்சி உறுப்பினரே நியமிக்கப்பட்ட நிலையில், இந்த முறை அப்பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமா அல்லது பாஜக தலைமையிலான தேசிய கூட்டணிக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மக்களவை சபாநாயகர் யார்? யாருக்கு வாய்ப்பு? துணை சபாநாயகர் தேர்வில் மரபை காக்குமா பாஜக? - Lok Sabha Session