ETV Bharat / bharat

'ஒருவரின் சாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது?' - மக்களவையில் சீறிய கனிமொழி! - kanimozhi mp

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 7:58 PM IST

Kanimozhi slams BJP in Parliament: குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி இப்போது மாநில உரிமைகளைப் பறிக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசினார்.

Kanimozhi
கனிமொழி மற்றும் நரேந்திர மோடி (Credits - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: மக்களவையில் இன்று (ஆகஸ்ட் 1) தமிழில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது, “ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது.

கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். மாநில அரசுகள்தான் கல்விக்காக 50 சதவீத நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் எனக் கூற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார்.

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். மதிய உணவுத் திட்ட நிதியை ஒன்றிய அரசு குறைத்தது ஏன்? குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளதாகவும், இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது ஒன்றிய அரசு என்றும் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

மேலும், குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என அவர் கேள்வி எழுப்பிய கனிமொழி, சிறிய ஊர்களிலும் கல்லூரிகளைக் கொண்டு வந்தவர்தான் கருணாநிதி என கூறினார். நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை ஒன்றிய அரசு சிதைக்கிறது.

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லை. நீட் தேர்வைக் கொண்டு வந்ததன் மூலம் பயிற்சி மையங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவக் கனவுகளை ஒன்றிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

சாதி என்ற கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று காலம் காலமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியை வலியுறுத்தும் பிரதமர் தலைமையில் இயற்றப்படும் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறினார். ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது? சாதியற்றவர்களாக வாழ்வதில்தான் பெருமை உள்ளது என்று கனிமொழி கூறினார்.

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 287 ஆக உயர்வு.. கேரளாவுக்கு விரையும் தேசிய தலைவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.