ETV Bharat / bharat

12 நாட்களில் 24 லட்சம் பேர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் - பிரதமர் மோடி பெருமிதம்! - PM Modi in Assam

24 lakh people visit Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் திறந்த 12 நாட்களில் ஏறத்தாழ 24 லட்சம் பேர் சென்று உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Feb 4, 2024, 7:05 PM IST

Updated : Feb 5, 2024, 7:56 PM IST

கவுகாத்தி : அசாம் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு உள்ள 11 ஆயிரத்து 599 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் முடிவு பெற்ற திட்டப்பணிகளை தலைநகர் கவுத்தியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கலும் நாட்டினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பது, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், நாட்டில் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மற்றும் ஊக்குவிப்பதற்கான பணியில் தனது அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பது மூலம் நாட்டில் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் அதிகரிக்க முடியும் என பிரதமர் மோடி கூறினார்.

வடகிழக்கு பகுதிகளை ஒன்றிணைக்கும் கமாக்யா வழிதடத்தை கட்டமைப்பதை மத்திய அரசு எதிர்நோக்கி உள்ளதாகவும் அதன் மூலம் நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு பகுதிகளில் வரலாறு காணாத அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளதாக கூறினார்.

2014ஆம் ஆண்டுக்கு முன்னர், பின்னர் என இரண்டு அத்தியாயங்களாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டால் டபுள் என்ஜின் மத்திய அரசு பல்வேறு அளப்பறிய பணிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதனிடையே மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக,3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த புதிய கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று (பிப். 4) அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடியின் விழாவில் அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய அமைச்சர் சர்பானந்தா ஸ்னோபால் மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அயோத்தி ராமர் கோயில் திறந்த 12 நாட்களில் ஏறத்தாழ 24 லட்சம் பேர் கோயிலுக்கு சென்றதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க : பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு? என்ன காரணத்திற்காக? யார் கொடுத்தது தெரியுமா?

Last Updated : Feb 5, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.