புவனேஷ்வர்: ஒடிசா முதலமைச்சராக மோகன் சரண் மாஜி ஒடிசா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ராஜ்நாத் சிங் தலைமையிலான் தேர்வு கமிட்டி மோகன் சரண் மாஜியை முதலமைச்சராக தேர்வு செய்து அறிவித்துள்ளது.
4 முறை எம்எல்ஏவான மோகன் சரண் மாஜி, மாநிலத்தின் பழங்குடியின மக்களின் முகமாக அறியப்படுகிறார். நடப்பு சட்டப் பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு அவர் போட்டியிட்டார். ஜூன் 12ஆம் தேதி அவர் ஒடிசா முதலமைச்சராக அவர் பொறுப்பேற்று கொள்கிறார்.
18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் பிஜூ ஜனதா தளத்தை பின்னுக்குத் தள்ளி பாஜக ஆட்சியை கைப்பற்றியது. 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில் பாஜக 74 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்ளில் மட்டும் வெற்றி பெற்றும் தோல்வியை தழுவியது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஒரு வார காலம் ஆன நிலையிலும், ஒடிசாவில் முதலமைச்சரை தேர்வு செய்வதில் பாஜக இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக கடந்த 9ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. பிரதமர் மோடியுடன் சேர்த்து 72 பேர் மத்திய அமைச்சர், இணை அமைச்சர், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், ஒடிசாவில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான குழு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டது. இன்று ஒடிசா விரைந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில பாஜக தலைவர்களுடன் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான தீவிர அலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து இடிசா முதலமைச்சராக மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 4 முறை எம்எல்ஏவாக இருந்த மோகன் சரண் மாஜி நடப்பு சட்டப் பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மாநிலத்தின் பழங்குடியின மக்களின் முகமாக மோகன் சரண் மாஜி அறியப்படுகிறார்.
முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் ரகுபர் தாசை சந்தித்து ஆட்சி அமைக்க மோகன் சரண் மாஜி உரிமை கோர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி ஒடிசா முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரபாதி பரிதா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்ட மோகன் சரண் மாஜி தன்னை எதிர்த்து களம் கண்ட பிஜூ ஜனதா தள வேட்பாளர் மினா மாஜியை காட்டிலும் 11 ஆயிரத்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: ஆந்திர பிரதேச முதலமைச்சராக நாளை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு! துணை முதலமைச்சர் பவன் கல்யான்! - Andra Pradesh CM oath Ceremony