ETV Bharat / bharat

மணிப்பூரில் மீண்டும் கலவரம்! வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி எனத் தகவல்! - Lok Sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

மணிப்பூரில் வாகுப்பதிவு மையத்தின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஏறத்தாழ 3 பேர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 1:25 PM IST

இம்பால் : மணிப்பூரில் மொத்தம் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் என இரண்டு தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் முதல் கட்ட மக்களவை தேர்தலில் இன்னர் மணிப்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் கூறப்படுகிறது.

இம்பால் கிழக்கு பகுதியில் மொய்ரங் சட்டப் பேரவைக்குட்பட்ட பகுதியில் தமன்போக்பி வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குப்பதிவு மையம் பகுதியில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக 23 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், இம்பால் கிழக்கு பகுதியில் உள்ள தோங்ஜு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையம் சூறையாடப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. பாமோன் கம்பு என்ற இடத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் இவிஎம் இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் பாஜக ஏஜென்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் உள்ள இன்னர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. முன்னதாக கிழக்கு இம்பாலில் உள்ள Luwangsangbam Mamang Leikai பகுதியில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கடந்த ஆண்டு மே 3ஆம் தேதி மணிப்பூரில் உள்ள இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடத்தை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது மீண்டும் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : மக்களவை தேர்தல் 11 மணி நிலவரம்: அதிகபட்சமாக திரிபுராவில் 34.54% வாக்குப்பதிவு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.