சிக்பல்லபுரா: தெலுங்கு மக்களிடையே பிரசித்திபெற்ற 'மார்கதர்சி சிட்பண்ட்' நிறுவனம், கர்நாடக மாநிலம், சிக்பல்லபுராவில் தனது புதிய கிளையைத் திறந்துள்ளது. இது அந்நிறுவனத்தின் 115-ஆவது கிளையாகும். மார்கதர்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சைலஜா கிரண் புதிய கிளையை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மார்கதர்சி நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவுக்கு பிறகு, புதிய கிளையின் முதல் வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஷைலஜா கிரண், அதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார். மார்கதர்சி நிறுவனத்தில் சீட்டு துவங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
வங்கிகளுடன் ஒப்பிடுகையில் பணத்தை எளிதாக பெற முடிவதாகவும் மற்றொரு வாடிக்கையாளர் தெரிவித்தார். மேலும், பல ஆண்டுகளாக தங்களது நிதி ஆதாரமாக மார்கதர்சி சிட்பண்ட் திகழ்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மார்கதர்சி நிறுவனத்தில் சீட்டு செலுத்தும் ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், பணம் எடுக்கும்போது தங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டெல்லியில் பிரதமர் மோடி - மாலத்தீவு அதிபர் சந்திப்பு.. இருநாட்டு தலைவர்கள் பேசியது என்ன?
புதிய கிளை திறப்பு குறித்து நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சைலஜா கிரண் கூறுகையில், "மார்கதர்சி சிட்பண்ட் 115வது கிளையை சிக்பல்லபுராவில் தொடங்கியுள்ளோம். இது கர்நாடகாவில் 24-ஆவது கிளையாகும். சிக்பல்லபுராவில் கிளை திறப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மண்டலத்தின் முன்னேற்றம், வளர்ச்சியில் நாங்களும் பங்கேற்க உள்ளோம்.
மேலும், இப்பிராந்தியத்துக்கு வழிகாட்டும் ஒரு குடும்ப நிறுவனமாக மார்கதர்சி திகழப்போகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதியுடன் மார்கதர்சி 62 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டுக்கான மாற்று முதலீட்டு நிறுவனமாக, வாடிக்கையாளர்கள் சிறந்த சேவைகளுக்கு மார்கதர்சியை நம்பலாம். வீடு கட்டுதல், குழந்தைகளின் திருமணம், மகளின் கல்வி அல்லது வியாபார வளர்ச்சிக்கு முதலீடுகளை வழங்குவதற்கு நாங்கள் உண்மையான நண்பர்களாக இருக்கிறோம்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்