தானே : மகாராஷ்டிர மாநிலம் தானே அடுத்த கோரேகான் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபரால் கடத்தப்பட்டு உள்ளார். மசூதிக்கு தொழுகைக்காக சென்று விட்டு திரும்பிய போது, சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுவனை பெற்றோரை தொடர்பு கொண்ட நபர், புதிதாக வீடு கட்ட வேண்டும் அதற்கு 23 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுவதால் அதை தருமாறு கேட்டு மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று (மார்ச்.25) அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் சிறுவனது சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருந்ததை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் அவர் டெய்லர் தொழில் செய்து வருவதாக கூறி உள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மகாராஷ்டிராவில் பணத்துக்காக இஸ்லாமிய சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ஜேஎன்யு மாணவர் சங்க தேர்தல்! இடதுசாரி அமைப்பு அபார வெற்றி! முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து! - JNU Students Union Election