ETV Bharat / bharat

நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்! தொடர் கதையாகும் பலி! பின்னணியில் யார்? - Major Illegal Liquor Death In India - MAJOR ILLEGAL LIQUOR DEATH IN INDIA

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ள நிலையில், பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், வரலாற்றில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்த செய்தியில் காணலாம்..

Etv Bharat
Representational Image (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 4:14 PM IST

ஐதராபாத்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 33 கடந்தது. மேலும் பலர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.

19.03.2024, பஞ்சாப்: பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் எத்தனால் கலந்த போலி மதுபானம் அருந்திய 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

14.05.2023, சென்னை: தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மதுபானத்தில் மெத்தனால் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

14.04.2023, பாட்னா: பீகாரில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் மோதிஹாரியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் அதே ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த போலி மதுபான குடித்துல் 26 பேர் இறந்தனர். மேலும் நான்கு பேர் மோதிஹாரி பகுதியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தனர்.

25.07.2022, குஜராத்: பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

22.02.2019 அசாம்: அசாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கள்ள சாராயம் குடித்த 80 பேர் உயிரிழந்தனர்.

09.02.2019: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கள்ள மது அருந்திய 104 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 2015 மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் மல்வானி மற்றும் மும்பையில் போலி மது குடித்த 102 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிசம்பர் 2011 மேற்கு வங்கம்: மேற்கு வங்கம் மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சங்கரம்பூர் கிராமத்தில் 170 பேர் போலி மது அருந்தி உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் ரிக்சா இழுப்பவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆவர்.

ஜூலை 2009 குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கள்ளச் சாராய அருந்தி 136 பேர் பலியாகினர்.

மே 2008 கர்நாடகா: கர்நாடகாவில் 180 பேர் போலி மது குடித்து உயிர் நீத்தனர்.

டிசம்பர் 2004 மகாராஷ்டிரா: மும்பையின் புறநகர் பகுதியான விக்ரோலியில் கள்ளச்சாராயம் அருந்திய இரண்டு பெண்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா, 1992: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் சட்டவிரோத மது குடித்து 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

கர்நாடகா, 1981: கர்நாடகாவின் பெங்களூருவில் மெத்தில் ஆல்கஹால் விஷத்தால் 308 பேர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விலை குறைந்த மது என மதுபானத்தில் கலப்படம் செய்து விற்றதே அதிகளவிலானோர் உயிரிழக்க காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் படிங்க: தலாய்லாமாவுடன் அமெரிக்கா குழு சந்திப்பு! திபெத் விவகாரத்தில் தீர்வா? சீனா கண்டனம் தெரிவிக்க என்ன காரணம்? - US delegations meet Dalai lama

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.