ETV Bharat / bharat

மகாராஷ்டிரா தேர்தல்: சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை; மூன்று இலக்கத்தில் சீட் கேட்கும் காங்கிரஸ்!

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. தான் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணியில் ( எம்விஏ) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அனேகமாக நிறைவடைந்துவிட்டது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மெகா கூட்டணி தலைவர்கள்
மெகா கூட்டணி தலைவர்கள் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 10:48 PM IST

புதுடெல்லி: 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி (நவம்பர் 20) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானதும் மகாராஷ்டிராவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

"மெகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) ஆகிய கட்சிகளுடனான தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. வழக்கமான சில சமரசங்களுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சமூகமாக சென்று கொண்டிருக்கிறது" என்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பி.எம். சந்தீப் ஈடிவி பாரத்திடம் கூறியுள்ளார்.

"100 மற்றும் 200 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாள்களை புழக்கத்தில் இருந்து நிறுத்திவிட்டு, குறைந்தப்பட்ச முத்திரை கட்டணத்தை 500 ரூபாயாக மகாராஷ்டிரா மாநில அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, விலைவாசி உயர்வால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள் மீதான பொருளாதார சுமையை மேலும் அதிகரிக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உமர் அப்துல்லா அண்ட் டீம்..! யார் அந்த ஐந்து அமைச்சர்கள்..? உற்று நோக்கப்படும் ஜம்மு காஷ்மீர்

"தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, 105 முதல் 110 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இப்பேச்சுவார்த்தை சமூகமாக சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை கேட்டு பெறுவது, அந்த இடங்களில் எல்லாம் வெற்றி பெறும் வகையில் வேட்பாளர்களை களமிறக்குவது, அதிருப்தியாளர்கள் சுயேச்சையாக களமிறங்குவதற்கு எந்தவொரு வாய்ப்பும் அளிக்காமல் இருப்பது என இந்த மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு மகாராஷ்டிரா தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு முதல்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

"மெகா கூட்டணியின் சார்பில், சியோன் கோலிவாடா சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. எங்களின் இந்த யாத்திரை வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே காங்கிரல் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி இத்தேர்தலில் அபார வெற்றி பெறும்" என்று, காங்கிரஸ் நிர்வாகியும், யோன் கோலிவாடா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவருமான கணேஷ் குமார் யாதவ் ஈடிவி பாரத்திடம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.