ETV Bharat / bharat

அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை.. நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் காரசார பேச்சு! - su venkatesan

Su Venkatesan parliament speech: உங்களுக்கு (பாஜக) வாக்களிக்காவிட்டால் அயோத்தியையும் கைவிடுவீர்கள், ஆண்டவனையும் கைவிடுவீர்கள் என்பது தான் குடியரசுத் தலைவர் உரையின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு சொல்லியுள்ள செய்தி என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் (Credits - Sansad tv)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 3:43 PM IST

டெல்லி: 18வது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதுரை எம்பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது, "நாடாளுமன்றத் தேர்தலின் தீர்ப்பை உள்வாங்கிக் கொண்டதாக இந்த அரசினுடைய உரை அமையவில்லை.

பாஜக கைகளில் பெரும்பான்மையைக் கொடுத்தால் வாக்களிக்கும் உரிமை கூட இருக்காது என்ற அச்சத்தை இந்திய மக்கள் வெளிப்படுத்தி இருப்பது தான் இந்த தேர்தலினுடைய தீர்ப்பு. கடைசி நாளில் பிரதமர் இந்த அவையில் பேசிய பேச்சை நான் நினைவுபடுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.

'தேர்தலுக்குப் பிறகு இந்த அவையில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை; பார்வையாளர் மாடத்தில் தான் எதிர்க்கட்சிகளுக்கு இடம்' என்று பேசினார். ஆனால், இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவரின் உரையை இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கேட்க வைத்திருக்கிற பெருமையை இந்திய வாக்காளர்கள் நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.

பிரதமருடைய அன்றைய பேச்சு முழுக்க முழுக்க அயோத்தியைப் பற்றி இருந்தது. ஆனால், இன்றைக்கு குடியரசுத் தலைவரின் உரையில் அயோத்தி என்ற சொல்லே இல்லை. உங்களுக்கு வாக்களிக்காவிட்டால் அயோத்தியையும் கைவிடுவீர்கள், ஆண்டவனையும் கைவிடுவீர்கள் என்பது தான் குடியரசுத் தலைவர் உரையின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு சொல்லியுள்ள செய்தி" என தெரிவித்தார்.

மேலும் "கோயில்களை வாக்குச்சாவடியின் வாசலாக பாஜக பார்க்கிறது. கோயில்கள் வாக்குச்சாவடிகளின் வாசல்கள் அல்ல, அது ஆன்மீகத்தின் உறைவிடம் என்பதை உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள் அயோத்தி மக்கள். செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் இதையெல்லாம் தகர்த்துவிட்டுத் தான் இந்திய ஜனநாயகம் இந்த அவையிலே கால் ஊன்றியது.

மன்னராட்சி எப்பொழுது ஒழிந்ததோ, அப்பொழுதே செங்கோலின் மகிமையும் ஒழிந்துவிட்டது. நாடாளுமன்றத்தின் பின்புற வாசலிலே காந்தியைக் கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள். அம்பேத்கரைக் கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள். ஆனால் சாணக்கியரையும், சாவர்க்கரையும் செங்கோலையும் நாடாளுமன்றத்திற்குள்ளே வைத்திருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டு தேர்தலுக்கு எட்டு முறை பிரதமர் வந்தார். தமிழ்நாட்டின் பெருமையை, தமிழ்மொழியின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் பேசினார். தேர்தல் முடிந்ததும் உத்தரப் பிரதேசத்தில் போய் தமிழர்களைப் பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள்? பீகாரிலே என்ன பேசினீர்கள்? ஒடிசாவில் என்ன பேசினீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதேபோல, சிறுபான்மை மக்களை ஊடுருவல்காரர்கள் என்று, அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்கள் என்றும் நீங்கள் பேசுகிறீர்கள். தொடர்ந்து இதையெல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருந்தது. அதேபோல, இன்றைக்கு தேர்தலுக்குப் பிறகு நீட் தேர்வு பிரச்னை.

அதை பற்றி கல்வி அமைச்சர் பேச மறுக்கிறார். ரயில் விபத்தைப் பற்றி ரயில்வே அமைச்சர் மறுக்கிறார். மணிப்பூர் வன்முறைகளைப் பற்றி பேச உள்துறை அமைச்சர் மறுக்கிறார். ஆனால், அதற்குப் பதிலாக தேர்தலுக்குப் பிறகும் இந்தியாவின் பல இடங்களில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதேபோல பல இடங்களிலே எழுத்தாளர் அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவை நிறுத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல... நாடாளுமன்றத்தை உலுக்கிய ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.