ETV Bharat / bharat

ஜெய்ப்பூர் வீதிகளில் சுற்றுலா! பிரான்ஸ் அதிபர் உற்சாகம்! யுபிஐ மூலம் பொருட்கள் வாங்கிய தலைவர்கள்! - Republic day

France President India Visit : குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்து உள்ளார். முன்னதாக ஜெய்ப்பூர் ஹவா மஹாலுக்கு சென்ற பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் மோடி அங்குள்ள கடையில் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Immanuel Macron - PM Modi
Immanuel Macron - PM Modi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 1:10 PM IST

Updated : Jan 26, 2024, 2:12 PM IST

ஜெய்ப்பூர் : ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்து உள்ளார்.

இந்நிலையில், ஜெய்ப்பூர் சென்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி அங்குள்ள புகழ்பெற்ற ஹவா மஹாலுக்கு சென்றனர். அங்கு இருவரும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தணை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அம்பர் கோட்டைக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அம்பர் கோட்டையில், பாரம்பரிய நடனக் கலை மூலம் பிரான்ஸ் அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து அங்குள்ள வைக்கப்பட்டு உள்ள சிறிய கண்காட்சியை அவர் பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அம்பர் கோட்டையில் இருந்து ஜந்தர் மந்தர் வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பழங்கால வானியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்ப்களை பிரதமர் மோடி காண்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, ஜெய்ப்பூர் ஹவா மஹால் பகுதியில் உள்ள சாலையோர கடைகளுக்கு சென்ற இரு தலைவர்களும், யுபிஐ மூலம் பரிவர்த்தணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோப யாத்திரையை நிறைவு செய்த பின்னர் ராம்பாக் அரண்மனைக்கு வரும் பிரான்ஸ் அதிபருக்கு, பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் அதிபரின் வருகையை முன்னிட்டு ஜெய்ப்பூர் நகரமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.

இந்தியா - பிரான்ஸ் நாடுகள் இடையிலான ராஜாங்க ரீதியிலான நட்புறவின் 25வது ஆண்டு நினைவுகூறும் வகையில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். தொடர்ந்து நாளை (ஜன. 26) டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் மேக்ரான், இந்திய முப்படைகளின் ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு ரசிக்க உள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற பாஸ்டில் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முல்லை பெரியாற்றில் புதிய அணை - கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

Last Updated : Jan 26, 2024, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.