கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் கட்விக் நகருக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் AI 149 என்ற விமான செல்ல இருந்தது. இந்நிலையில், மும்பையில் உள்ள ஏர் இந்தியா தகவல் மையத்திற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், லண்டன் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து மும்பை ஏர் இந்தியா தகவல் மையத்தினர் கொச்சி விமான நிலைய அதிகாரிகளை உஷார்படுத்தி உள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விமான நிலையத்தின் தனிப்பட்ட பகுதிக்கு கொண்டு வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணை விசாரித்த போலீசார் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியைச் சேர்ந்த சுஹைப் என்பவரை கைது செய்தனர். கொச்சி விமான நிலையத்திற்கு செக் இன் செய்ய சுஹைப், அவரது மனனைவி மற்றும் மகளுடன் வந்த நிலையில், போலீசர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சுஹைப் பறக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன காரணத்திற்காக அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சனாதன தர்மம் விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன்- கர்நாடக நீதிமன்றம்! - Udayanidhi Stalin Sanatana Dharma