ETV Bharat / bharat

6-ம் கட்ட வாக்குப்பதிவு - 5 மணி நிலவரம் என்ன? - Lok Sabha Election 2024 Phase 6 - LOK SABHA ELECTION 2024 PHASE 6

Lok Sabha Election 2024 Phase 6 LIVE
6ம் கட்ட மக்களவை தேர்தல் (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 7:28 AM IST

Updated : May 25, 2024, 11:36 AM IST

18:22 May 25

5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவு!

6ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன்படி,

பீகார் - 52.24 சதவீதம்

ஹரியானா - 55.93 சதவீதம்

ஜம்மு மற்றும் காஷ்மீர் - 55.35 சதவீதம்

ஜார்கண்ட் - 61.41 சதவீதம்

டெல்லி - 53.73 சதவீதம்

ஒடிசா - 59.60 சதவீதம்

உத்தரப்பிரதேசம் - 52.02 சதவீதம்

மேற்கு வங்கம் - 77.99 சதவீதம்

16:11 May 25

3 மணி நிலவரப்படி 49.02% வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 58 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.02% விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், பீகார் - 45.21%, ஹரியாணா - 46.26%, ஜம்மு-காஷ்மீர் - 44.41%, ஜார்க்கண்ட் - 54.34%, டெல்லி - 44.58%, ஒடிசா - 48.44%, உத்தரபிரதேசம் - 43.95%, மேற்கு வங்கம் - 70.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

13:05 May 25

தோனி ஜார்க்கண்டில் வாக்களித்தார்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

12:43 May 25

11 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 36.88% வாக்குப்பதிவு

11 மணி நிலவரம்

  • மேற்கு வங்காளம் - 36.88%
  • உத்தரப் பிரதேசம் - 27.06%
  • பீகார் - 23.67%
  • ஹரியானா - 22.09%
  • ஜம்மு & காஷ்மீர் - 23.11%
  • ஜார்கண்ட் - 27.80%
  • டெல்லி - 21.69%
  • ஒடிசா - 21.30%

12:14 May 25

'சர்வாதிகாரத்திற்கு எதிராக வாக்களித்துள்ளேன்' - அரவிந்த் கெஜ்ரிவால்

ஓட்டுப்போட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "சர்வாதிகாரம், பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்தேன். மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வெளியே வந்து வாக்களியுங்கள்" என்று கூறினார்.

11:32 May 25

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் ஆகியோர் குடும்பத்தோடு டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

11:22 May 25

ஜம்முவில் மெகபூபா முப்தி தர்ணா

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், ஜே&கே முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, தனது தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதி ஆகிய இரண்டிலும் போட்டியிடும் இவர், தனது செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெற்கு காஷ்மீர் மக்கள் வெளியே வந்து வாக்களித்தால் மெகபூபா முப்தி வென்று நாடாளுமன்றம் செல்வேன் என்பதால் காஷ்மீர் மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

11:18 May 25

ஓட்டுப்போட வந்த அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்ப உறுப்பினர்களுடன் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப் போடுவதற்காக வந்தார்.

10:59 May 25

சிபிஐ(எம்) மூத்தத் தலைவர் பிருந்தா காரத் வாக்களிப்பு

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் சர்வாதிகாரம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக வாக்களித்தேன். எனது வாக்கு மாற்றத்தை கொண்டு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10:46 May 25

மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரின் கார் தடுத்து நிறுத்தம்

மேற்கு வங்கம் மாநிலம், காரக்பூர் மாவட்டம் போன்புரா கிராமத்தில் உள்ள கிஸ்மத் அங்குவா என்ற இடத்தில் மேதினிபூர் மக்களவை பாஜக வேட்பாளர் அக்னிமித்ர பால் சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

10:42 May 25

துரோணாச்சார்யா விருது பெற்ற மகாவீர் சிங் போகட் வாக்களிப்பு

ஹரியானாவின் சார்க்கி தாத்ரியில் உள்ள வாக்குச்சாவடியில் துரோணாச்சார்யா விருது பெற்ற மல்யுத்த பயிற்சியாளர் மகாவீர் சிங் போகட் வாக்களித்தார்.

10:41 May 25

10:24 May 25

9.00 மணி நிலவரப்படி, டெல்லியில் 8.94% வாக்குப்பதிவு

9.00 மணி நிலவரம்

  • மேற்குவங்கம் - 16.54%
  • ஜார்க்கண்ட் - 11.74%
  • டெல்லி - 8.94%
  • ஜம்மு & காஷ்மீர் - 8.89%
  • பீகார் - 9.66%
  • ஒடிசா - 6 - 7.43%
  • ஹரியானா - 8.31%
  • உ.பி - 12.33%

10:18 May 25

காங்கிரஸின் பிரியங்கா காந்தி வாக்களிப்பு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் எங்கள் குறைகளை ஓரம் கட்டிவிட்டு, நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்காக வாக்களிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

10:14 May 25

தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து வாக்களிப்பு

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து, அவரது குடும்பத்தினருடன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

10:08 May 25

'அரசியலில் பெண்களின் பங்கு முக்கியம்' - எம்பி சுவாதி மலிவால்

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சுவாதி மலிவால் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய நாள். அனைவருக்கும், குறிப்பாக பெண்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவில், அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது" என்று கூறினார்.

10:02 May 25

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாக்களிப்பு

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்களிப்பது என்பது ஒரு பொறுப்பு மிக்க சக்தி. இந்தியா உலகின் மிகவும் துடிப்பும், சுறுசுறுப்பும் உள்ள ஜனநாயகம்" என்று தெரிவித்துள்ளார்.

09:56 May 25

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாக்களிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆயோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

09:54 May 25

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாக்களிப்பு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில், 6ம் கட்ட மக்களவை தேர்தல் மற்றும் 3ம் கட்ட ஒடிசா சட்டமன்ற தேர்தல் என இரண்டிற்கும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

09:42 May 25

பிரியங்கா காந்தியின் குடும்பத்தினர் வாக்களிப்பு

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் மகன் ரெஹான் வத்ரா, மகள் மிரயா வத்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை செலுத்தினர்.

09:39 May 25

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லியில் வாக்களிப்பு

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

09:33 May 25

சஞ்சீப் பாண்டா ஐஏஎஸ் வாக்களிப்பு

ஒடிசா போலீஸ் கமிஷனர் சஞ்சீப் பாண்டா ஐஏஎஸ், புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

09:21 May 25

செல்போன் அழைப்புகளுக்கு தடை..? மெகபூபா உள்ளிருப்பு போராட்டம்!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், ஜே&கே முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, தனது கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அனந்த்நாக் மக்களவைத் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காலையில் இருந்து என்னால் எந்த அழைப்பும் செய்ய முடியவில்லை. அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நாளில் திடீரென செல்போன் சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு எந்த விளக்கமும் இல்லை" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

09:15 May 25

மேற்கு வங்கத்தில் பாஜக - டிஎம்சி இடையேயான மோதல்.. ஒருவர் பலி

மேற்கு வங்கம் மாநிலம் 8 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெட்குண்டு கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினருமான ஷேக் மொய்புல் என்பவர் கொல்லப்பட்டார். இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஆனந்த் பலத்த காயமடைந்தார்.

09:11 May 25

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாக்களிப்பு

டெல்லியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் 6ம் கட்ட மக்களவை தேர்தலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

09:03 May 25

புவனேஸ்வரில் அபராஜிதா சாரங்கி வாக்களிப்பு

ஒடிசா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் அபராஜிதா சாரங்கி புவனேஸ்வரியில் உள்ள வாக்குச்சாவடியில் 6ம் கட்ட மக்களவை தேர்தல் மற்றும் 3ம் கட்ட ஒடிசா சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கும் என வாக்களித்தார்.

08:49 May 25

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வாக்களிப்பு

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அவரது மனைவி லட்சுமி பூரி ஆகியோர் வாக்களித்தனர்.

08:45 May 25

ஹரிவன்ஷ் நாராயண் சிங் வாக்களிப்பு

டெல்லியில் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

08:42 May 25

கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் வாக்களிப்பு

டெல்லியில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் வாக்களித்தார். இத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

08:33 May 25

டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினா சிங் வாக்களிப்பு

டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான அதிஷி மர்லினா சிங் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய கூட்டணியின் கோட்டையாக இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவை மெதுவாக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த பகுதிகளில் இது நடந்தால், அது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை மீறும் செயலாகும்” என்று கூறினார்.

08:20 May 25

ஆட்டோ ரிக்ஷாவில் வந்து வாக்களித்த வி.கே.பாண்டியன்

ஒடிசாவில் 5டி திட்டத்தின் தலைவரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான வி.கே.பாண்டியன் ஆட்டோ ரிக்ஷாவில் வந்து வாக்களித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜனநாயகத்தில் அனைவரும் சமம். ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். எனது வாக்குரிமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஆட்டோ சங்கம் என்னைக் கேட்டுக்கொண்டதால் நான் ஆட்டோ ரிக்ஷாவில் வந்தேன்" என்று கூறினார்.

07:46 May 25

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களிப்பு

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீங்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்பதே ஜார்கண்ட் வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள். வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளேன். வளர்ச்சியில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு" என்று தெரிவித்துள்ளார்.

07:41 May 25

'பெண்களும் இளைஞர்களும் தவறாமல் வாக்களிக்கவும்' - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், "2024 மக்களவைத் தேர்தலில் 6-வது கட்டமாக வாக்களிக்கும் அனைவரையும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாக்கும் கணக்கிடப்படும், உங்களுடையதையும் எண்ணுங்கள். மக்கள் தேர்தலில் ஈடுபடும்போதும், தீவிரமாக செயல்படும்போதும் ஜனநாயகம் செழிக்கும். பெண் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று நான் குறிப்பாக கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்

07:39 May 25

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வாக்களிப்பு

ஹரியானா மாநிலத்தின் கர்னால் ம்க்களவை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும், பாஜக வேட்பாளருமான மனோகர் லால் கட்டார், கர்னாலில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

07:20 May 25

58 தொகுதிகளில் 6ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 5 மணி நிலவரப்படி மொத்தம் 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில், 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல, ஒடிசாவில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டெல்லியில் 8 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி உள்ளிட்டவைகளில் 58 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Last Updated : May 25, 2024, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.