ETV Bharat / bharat

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது - பிரதமர் மோடி அறிவிப்பு!

Bharat Ratna for L K Advani: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 12:29 PM IST

Updated : Feb 4, 2024, 6:56 PM IST

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்படி, எல்.கே.அத்வானி கெளரவிக்கப்படுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்து உள்ளார். பாரத ரத்னா விருது பெறும் எல்.கே.அத்வானிக்கு வயது 96 ஆகும்.

மேலும், இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள X வலைத்தளப் பதிவில், “எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இது குறித்து நான் ஏற்கனவே அவரிடம் பேசி, எனது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. அடிமட்டத்தில் இருந்து தொடங்கிய அவரது வாழ்க்கை, நாட்டின் துணை பிரதமராக சேவை செய்யும் அளவிற்கு உயர்ந்தது.

அவர், உள்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக சிறப்பாக பங்காற்றியவர். அவரது நாடாளுமன்ற செயல்பாடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை மற்றும் எதிர்கால நுண்ணறிவு மிக்கவை. அவரது நீண்ட பொதுவாழ்வு சேவை என்பது, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு. அவர், அரசியல் நெறிமுறைகளில் ஒரு முன்மாதிரியான தரத்தை அமைத்து உள்ளார்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கு அதிகமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவருக்கு வழங்கப்படும் பாரத ரத்னா என்பது எனக்கு உணர்வுப்பூர்வமான ஒன்றாக உள்ளது. அவருடன் பழகி, அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கான நிறைய வாய்ப்புகள் கிடைத்ததை நான் எனது பாக்கியமாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவசேனா பிரமுகர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு; மகாராஷ்டிராவில் பரபரப்பு!

Last Updated : Feb 4, 2024, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.