ஜஜ்பூர் : ஒடிசாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்த விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ள நிலையில், 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்.. அனைவரும் வருந்துவர்" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024