ETV Bharat / bharat

திருமணத்துக்கு முன் குழந்தை பெற்றெடுத்த சிறுமி: காரணமான இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்! - என்ன காரணம்? - POCSO case

இளம்பெண் மற்றும் அவரது குழந்தையின் எதிர்கால நலன்கருதி, சிறுமியாக இருந்தபோது அவரை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீதான வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடக உயர் நீதிமன்றம் (Image Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 5:14 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம், மைசூருக்கு உட்பட்ட வருணா ஹுப்ளி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மஞ்சுநாத். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியும் சில ஆண்டுகளுக்கு முன் ஒரே பள்ளியில் படித்து வந்தபோது காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியின் தாயார், 2023, பிப்ரவரி 15 ஆம் தேதி, மைசூருக்கு உட்பட்ட உதயகிரி காவல் நிலையத்தில் மஞ்சுநாத் மீது புகார் அளித்தார்.

அதில், 'தமது மகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று, அவளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்புகாரின் அடிப்படையில் மஞ்சுநாத்துக்கு எதிராக போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் விளைவாக, திருமணத்துக்கு முன்பே அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. மேலும், மஞ்சுநாத் மீதான அவரது காதலும் குறையாமலேயே இருந்தது. இதனை கருத்தில் கொண்டு, இவ்வழக்கில் மஞ்சுநாத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஜாமீனில் வெளியே வந்தவர், தான் பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும் மஞ்சுநாத் மீண்டும் சிறைக்கு திரும்பினார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்ற தனி நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது. தாய் மற்றும் சேயின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், சமூகத்தில் அவர்கள் அவமானங்களை சந்திப்பை தவிர்க்கும் பொருட்டும் இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மனுதாரர் (மஞ்சுநாத்) திருமணத்துக்கு முன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தமக்கு என்ன நேர்ந்தது என்று அக்குழந்தைக்கு தெரியாது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகளுக்காக, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லையென்றால் சம்பந்தப்பட்ட இளம்பெண் மற்றும் குழந்தையின் வாழ்க்கை நெருக்கடிக்கு தள்ளப்படக்கூடும். இவற்றையும் கருத்தில் கொண்டே இவ்வழக்கு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மஞ்சுநாத் அவரது மனைவியுடன் சேர்ந்து வாழவும் அனுமதி அளித்துள்ளது.

அதேசமயம், குழந்தை மற்றும் அவரது தாயின் எதிர்காலத்துக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், மஞ்சுநாத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு வேலை மோகத்தில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிய இந்தியர்கள்: 14 இந்தியர்கள் கம்போடியாவில் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.