ETV Bharat / bharat

ரேணுகா சுவாமி கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்! - RENUKASWAMY MURDER CASE

ரேணுகா சுவாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு உடல் நலக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Renukaswamy Murder Case
நடிகர் தர்ஷன் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 2:10 PM IST

பெங்களூரு: கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு, தர்ஷனின் ரசிகையான சித்ரதுர்காவைச் சேர்ந்த 33 வயதான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து, கடந்த ஜூன் 9ஆம் தேதி, தனது ரசிகரான ரேணுகா சுவாமியை, தர்ஷன் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜூன் 11ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், ஜாமீன் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணையின் போது அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த பெங்களூரு நீதிமன்ற நீதிபதி, தர்ஷனின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, தர்ஷன் தரப்பில் உடல் நலக் காரணங்களை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஷெட்டி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள பல்லாரி மத்திய சிறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் ஆகியோரிடமிருந்து சீல் வைக்கப்பட்ட கவரில் தர்ஷனின் மருத்துவ அறிக்கைகளை அரசு சமர்ப்பித்தது.

அதன் தொடர்ச்சியாக தர்ஷன் தரப்பில், "தர்ஷனின் இரு கால்களிலும் உணர்வின்மை இருப்பதால், மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு அனுமதித்து ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோரப்பட்டது.

இதையும் படிங்க: சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

அதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, “மருத்துவ ஆவணங்களில் தர்ஷன் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பது குறித்த விவரங்கள் இல்லை. ஆகவே, அரசு மருத்துவமனையிலேயே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றும் வாதிடப்பட்டது.

இதனை அடுத்து, தர்ஷன் தரப்பில் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்ற முன்மாதிரிகளை நீதிபதி குறிப்பிட்டு, "விசாரணைக் கைதி ஒருவர் எங்கு மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று ஆணையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. அதேநேரம், அறுவை சிகிச்சைக்கு மைசூரைத் தேர்வு செய்தது ஏன்" என்று சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தர்ஷன் தரப்பு வழக்குரைஞர், "மைசூரில் சிகிச்சைக்கு குறிப்பிடும் தனியார் மருத்துவமனையில் தர்ஷனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கான சிறப்பான வசதிகள் உள்ளதால், அங்கு சிகிச்சை செய்ய வேண்டும்" என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

இதனை அடுத்து, தர்ஷன் தரப்பு மற்றும் அரசுத் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, நடிகர் தர்ஷனின் உடல் நலக் காரணங்களை கருத்தில்கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தற்போது அவர் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.