ETV Bharat / bharat

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு: பவானி ரேவண்ணாவுக்கு முன் ஜாமீன்- நீதிமன்றம்! - Bhavani Revanna - BHAVANI REVANNA

முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வழக்கில் பணிப் பெண்ணை கடத்தியதாக கைதான பவானி ரேவண்ணாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Bhavani Revanna (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 4:31 PM IST

பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோ வழக்கில் அவரது வீட்டில் முன்னாள் பணியாற்றிய பணிப் பெண்னை கடத்தியதாக வழக்குப் பதிவு செய்த பெங்களூரு கேஆர் நகர் போலீசார் அவரது தந்தை எச்டி ரேவண்ணா மற்றும் சதீஷ் பாபன்னா ஆகியோரை கைது செய்தனர்.

பணிப் பெண்ணை கடத்திய வழக்கில் எச்டி ரேவண்ணாவை முதல் குற்றவாளியாகவும், சதீஷ் பாபன்னாவை இரண்டாவது குற்றவாளியாகவும் முதல் தகவல் அறிக்கையில் கேஆர் நகர் போலீசார் குறிப்பிட்டனர். பின்னர் இந்த வழக்கில் இருந்து எச்டி ரேவண்ணா ஜாமீனில் விடுதலையானார்.

இந்நிலையில், பணிப் பெண்ணை கடத்திய வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி எச்.டி ரேவண்ணாவின் மனைவியும் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்னாவின் தாயுமான பவானி ரேவண்ணா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஜூன் 14ஆம் தேதி நீதிபதி கிருஷ்ணா எஸ் திக்‌ஷித் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று (ஜூன்.18) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பவானி ரேவண்ணாவுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி கிருஷ்ணா எஸ் திக்‌ஷித் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் வழக்கு விசாரணைக்கு எப்போதெல்லாம் அழைப்பு வருகிறதோ, அப்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும், வழக்கு விசாரணை தொடர்பாக மைசூரு மற்றும் ஹசன் மாவட்டங்களில் எப்போது அழைக்கப்படுகிறாரோ அப்போது நேரில் சென்று விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தைனைகளை விதித்து நீதிபதி முன் ஜாமீன் வழங்கினார்.

கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கடசியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது.

இந்த வழக்கு விசாரணையில் இருந்து தப்ப வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா நீண்ட பயணத்திற்கு பின் இந்தியா வந்து சரணடைந்தார். அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: எலான் மஸ்க் பற்ற வைத்த நெருப்பு... இவிஎம் இயந்திரத்திற்கு ஜெகன் மோகன் எதிர்ப்பு! - EVM Machine Jagan Mohan reddy

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.