ETV Bharat / bharat

கர்நாடக கிர்க்கெட் வீரர் ஹொய்சலா மாரடைப்பால் உயிரிழப்பு..!

Cricketer K.Hoysala Dies Due to Heart Attack:: கர்நாடக கிர்க்கெட் வீரர் ஹொய்சலா நேற்று(பிப்.22) மாரடைப்பு காரணமாக காலமானார்.

Karnataka cricketer Hoysala dies of heart attack
கர்நாடக கிர்க்கெட் வீரர் ஹொய்சலா மாரடைப்பால் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 9:03 AM IST

பெங்களூரு: தமிழ்நாடு அணிக்கு எதிரான ஏஜிஸ் தென் மண்டல டோர்னமெண்ட்டில் (Aegis South Zone tournament) கர்நாடக அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியானது பெங்களூரு ஆர்எஸ்ஐ விளையாட்டு மைதானத்தில் நேற்று (பிப்.22) நடைபெற்றது. இதில், கர்நாடக கிர்க்கெட் அணியின் வீரர் ஹொய்சலா (34) விளையாடினார்.

இந்த போட்டியின் முடிவில் தனது அணி வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காகச் சென்ற ஹொய்சலா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனையறிந்த கிரிக்கெட் மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் ஹொய்சலாவிற்கு உடனடியாக அவரச சிகிச்சை அளித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக அவரரை பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கிரிக்கெட் வீரர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் கர்நாடக அணியின் நடுத்தர வரிசை பேட்மானகவும், அணியின் பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டார். முன்னதாக, கர்நாடக பிரீமியர் லீக்கிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு! 6 டிரங்கு பெட்டிகளுடன் வர நீதிமன்றம் உத்தரவு! மொத்தம் எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.