ETV Bharat / bharat

கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது.. நடந்தது என்ன? - Kannada Actor Darshan Arrest - KANNADA ACTOR DARSHAN ARREST

Actor darshan arrest: சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த நபரை கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ACTOR DARSHAN IMAGE
நடிகர் தர்ஷன் புகைப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 3:16 PM IST

Updated : Jun 11, 2024, 3:36 PM IST

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர், காமாக்‌ஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காமாக்‌ஷிபாலயா போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறியுள்ளனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னட நடிகர் தர்ஷன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காமாக்‌ஷிபாலயா போலீசார் நடிகர் தர்ஷனை மைசூருவில் இன்று (ஜூன் 11) கைது செய்தனர். பின்னர் தர்ஷனுடன் சேர்த்து இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் போலீசார் பெங்களூரு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த், “காமாக்ஷிபாலயாவில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 9ஆம் தேதி அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், அந்த உடலில் இருந்த காயங்களை வைத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இறந்தது சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த சேணுகா சுவாமி (33) என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பிரபல நடிகர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளார். கன்னட நடிகர் தர்ஷன் கரியா, கலாசிபால்யா, சாரதி, புல்புல், ராபர்ட், காற்றா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: SK 23ல் முருகதாஸ் உடன் மீண்டும் இணைந்த பிரபல வில்லன்! யார் தெரியுமா? - actor Vidyut Jammwal starrer in SK23

Last Updated : Jun 11, 2024, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.