ETV Bharat / bharat

ப்ரோபா -3 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ தகவல்! - PROBA 3 SATELLITES

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா -3 எனும் இரட்டை செயற்கைகோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி -சி 59 ராக்கெட்டை இன்று மாலை 4:04 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் சீறிபாயும் பிஎஸஎல்வி -சி 59  ராக்கெட்
விண்ணில் சீறிபாயும் பிஎஸஎல்வி -சி 59 ராக்கெட் (Credits - Youtube/ ISRO Official)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 4:44 PM IST

ஶ்ரீ ஹரிகோட்டா: சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா -3 எனும் இரட்டை செயற்கைகோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி -சி 59 ராக்கெட்டை இன்று மாலை 4:04 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஶ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 18வது நிமிடத்தில் அதாவது 4:22 மணியளவில் செயற்கோள்கள் அவற்றின் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தயாரிப்பான ப்ரோபா -3 செயற்கோள்களை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தமது பிஎஸ்எல்வி -சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி உள்ளது குறி்ப்பிடத்தக்கது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ப்ரோபா -3 செயற்கைகோள்கள் அவற்றின் புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பூமியில் இருந்து 600 கி.மீ. - 60,000 கி.மீ. தொலைவுக்கு இடையேயான நீள்வட்ட பாதையில் இந்த செயற்கைகோள்கள் சுற்றிவரும். பிஎஸ்எல்சி ராக்கெட்கள் வரிசையில் தற்போது ப்ரோ -3 செயற்கோள்கள் ஏவப்பட்டுள்ளது இஸ்ரோவின் 61வது திட்டமாகும்." என்று சோம்நாத் கூறினார்.

முன்னதாக, பிஎஸ்எல்வி சி -59 ராக்கெட், புதன்கிழமை (டிச.04) மாலை 4:08 மணியளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.