ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்துக்கு உட்பட்ட அகார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று மாலை (ஆக.13) இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து ஜம்மு -காஷ்மீர் மாநில போலீசுடன் இணைந்து இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது. இரவு நேரம் என்பதால் வனப்பகுதியில் இருள் கவ்வி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தேடுதல் வேட்டையை தற்காலிகமாக நிறுத்தும்படி ஆனது. இன்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை மீண்டும் தொடர்ந்தது.
அப்போது பயங்கரவாதிகள் தோடா மாவட்டத்துக்குட்பட்ட அஜார் பகுதியில் ஓடும் ஆற்றுக்கு அருகே பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை சுற்றிவளைக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னேறி சென்றனர். அப்போது பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
All Ranks of #WhiteKnightCorps salute the supreme #sacrifice of #Braveheart Capt Deepak Singh who succumbed to his injuries.#WhiteKnightCorps offers deepest condolences and stands firm with the bereaved family in this hour of grief.@adgpi@NorthernComd_IA pic.twitter.com/kc6SIczb3S
— White Knight Corps (@Whiteknight_IA) August 14, 2024
இதில் தேடுதல் வேட்டையை முன்னெடுத்துச் சென்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இளம் தளபதி (48 வது படைப்பிரிவு) தீபக் சிங் படுகாயம் அடைந்தார். உடனே அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் வீரமரணம் அடைந்தார் என்று ராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
J-K: Indian Army Captain killed in encounter with terrorists in Doda
— ANI Digital (@ani_digital) August 14, 2024
Read @ANI Story l https://t.co/kpy5GCZfyu#dodaattack #terroristattack #jammuandkashmir pic.twitter.com/oJX2UB8BCl
பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும், மேலும் அவர்களிடமிருந்து ஒரு எம்4 ரக துப்பாக்கியும் கைப்பற்றபட்டதாகவும், பயங்கரவாதிகளுடனான சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: விழுந்து மடிந்த பெண்கள்.. பீகார் சித்தநாத் கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி..!