ETV Bharat / bharat

மாலத்தீவு பட்ஜெட்டுக்கு இந்தியா நிதி உதவி: அண்டை நாட்டை நோக்கிய முதல் கொள்கை எனும் இந்திய நிலைப்பாட்டுக்கு ஊக்கம் - MALDIVIAN BUDGET

மாலத்தீவில் வரும் 2025ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்தியாவிடம் இருந்து மாலத்தீவின் ரூஃபியா மதிப்பில் 1.6 பில்லியன் நிதி உதவி(அமெரிக்க டாலரில் 104 மில்லியன்) பெறுவதற்கான அறிவிப்பு இடம் பெற உள்ளது.

இந்தியா-மாலத்தீவு இடையே ஆலோசனை
இந்தியா-மாலத்தீவு இடையே ஆலோசனை (Credits - XPage@MEAIndia)
author img

By Aroonim Bhuyan

Published : Nov 2, 2024, 5:18 PM IST

புதுடெல்லி: மாலத்தீவு நாட்டில் வரும் 2025ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்தியாவிடம் இருந்து மாலத்தீவின் ரூஃபியா மதிப்பில் 1.6 பில்லியன் நிதி உதவி(அமெரிக்க டாலரில் 104 மில்லியன்) பெறுவதற்கான அறிவிப்பு இடம் பெற உள்ளது. மாலத்தீவு அதிபராக முகமது முய்சு தேர்வு செய்யப்பட்டபோது இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் இந்த முன்னெடுப்பு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மாலத்தீவு 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டின்படி வெளிநாடுகளில் இருந்து 2.5 பில்லியன் ரூஃபியா நிதி உதவி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் நிதி உதவி என்பது 72 சதவிகிதம் ஆகும். மொத்தம் 56.6 ரூஃபியா மதிப்புள்ள அந்த நாட்டின் அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது.

மாலத்தீவு செய்தி இணையதளமான Edition.mv கூற்றின்படி,"மாலத்தீவுக்கு உதவும் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவதாக 502 மில்லியன் ரூஃபியாவும், ஜப்பான் 47 மில்லியன் ரூஃபியாவும் நிதி உதவி அளிக்க உள்ளன. அதே போல பாகிஸ்தான், இத்தாலி, சவூதி அரேபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் அடுத்த ஆண்டு மாலத்தீவுக்கு நிதி உதவி அளிக்க உள்ளன,"என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பொறுப்பேற்றபோது இந்தியா உடனான உறவு மோசமடைந்த நிலையில் இந்த முன்னெடுப்பு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் முக்கியமான நகர்வாகும். அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்ற பின்னர், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சொன்னார். இந்திய ராணுவத்தின் சார்பில் இருந்த 100 பேர் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் உள்ளிட்ட உதவி பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும், அவர்கள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு கூறினார். இதையடுத்து ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். அவர்களுக்குப் பதில் அவர்களின் பணியில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி-மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
பிரதமர் நரேந்திர மோடி-மாலத்தீவு அதிபர் முகமது முய்சு (Credits - XPage@MEAIndia)

முகமது முய்சு தலைமையிலான அரசில் மாலத்தீவு வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நேரிட்டன. அதிபராகப் பதவி ஏற்றதும் முதன் முறையாக துருக்கிக்கு பயணம் மேற்கொண்டார். வழக்கமாக மாலத்தீவு புதிய அதிபர்கள் இந்தியாவுக்கு முதன் முதலில் வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த மரபை முகமது முய்சு உடைத்தார். அதே போல பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவின் ஹைட்ரோகிராஃபி ஒப்பந்தத்தை புதுபிக்கவும் மாலத்தீவு மறுத்து விட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாலத்தீவு கடற்பகுதியில் சீன கப்பல்களுக்கும் மாலத்தீவு அனுமதி அளித்தது. சுற்றுலாத் துறையில் போட்டி மனப்பான்மையில் பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அரசியல்வாதிகள் விமர்சித்தனர். இது கடும் பின்னடவை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: டெல்லியில் பிரதமர் மோடி - மாலத்தீவு அதிபர் சந்திப்பு.. இருநாட்டு தலைவர்கள் பேசியது என்ன?

எனினும் இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவுடனான மாலத்தீவு வெளியுறவுக் கொள்கையில் திடீரென மாற்றம் தென்பட்டது. "மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும். இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு டெல்லி கடன் திருப்பிச் செலுத்தும் நிவாரணம் அளிக்கும்," என்று முகமது முய்சு கூறினார்.

அதே போல ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் முகமது முய்சு,"மாலத்தீவு-இந்தியா இடையேயான உறவு பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஒரு போதும் ஈடுபடமாட்டேன். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு கிடைக்கும் நிதி உதவி உபயோகம் அற்றது என்று உதவியை நிராகரிப்பது அல்லது புறக்கணிப்பது நல்லதல்ல,"என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் கடந்த ஜூன் மாதம் புதுடெல்லியில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற விழாவில் பங்கேற்றார். ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பட்ஜெட்டில் இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான மாலத்தீவுக்கு 2024 பட்ஜெட்டில் கடந்த ஆண்டைப் போலவே ரூ.400 கோடி நிதி உதவி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதே போல கடந்த ஆகஸ்ட் மாதம் மாலத்தீவு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார். சில புதிய திட்டங்களையும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் முகமது முய்சு அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு நல்லெண்ண பயணம் மேற்கொண்டார். அப்போது இருநாடுகளுக்கு இடையே ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், 'விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு கண்ணோட்டம்' என்ற ஆவணத்தையும் இருநாடுகளும் வெளியிட்டன.

அதிபர் முகமது முய்சு கடந்த அக்டோபர் மாதம் இந்தியா வந்தபோது, இந்தியா தரப்பில் 50 மில்லியன் டாலர் நிதி உதவி செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் மாலத்தீவுக்கு 400 மில்லியன் டாலர், 30 பில்லியன் டாலர் ஆக நாணய பரிமாற்ற ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாலத்தீவு பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட இந்த ஆண்டு நிதி உதவி அளித்தது போல வரும் பட்ஜெட்டின்போதும் இந்தியா உதவி அளிக்க வேண்டும் என்று மாலத்தீவு எதிர்பார்க்கிறது.

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான மனோகர் பாரிக்கர் மையத்தின் ஆராய்ச்சியாளர் ஆனந்த் குமார், "தமது நாட்டில் நிலவும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப தமது கொள்கைகளை அதிபர் முகமது முய்சு மாற்றம் செய்து கொள்கிறார். இந்தியா தம்மால் முடிந்த வரை மாலத்தீவுக்கு நிதி உதவி அளிக்க முயல்கிறது. அண்டைநாடுகளை நோக்கிய முதல் கொள்கை என்ற அடிப்படையில் இந்தியா உதவி செய்கிறது,"என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETVBharat TamilNadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.