ETV Bharat / bharat

"தபால் வாக்குகளை முதலில் எண்ணுங்கள்" - காங்கிரஸ் கூறும் காரணம் என்ன? - Lok Sabha election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அவற்றின் முடிவுகள் அறிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் (ECI) வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியா கூட்டணி தலைவர்கள்
இந்தியா கூட்டணி தலைவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 2:43 PM IST

டெல்லி: 18-ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கடந்த 1ஆம் தேதியுடன் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஒட்டு மொத்த இந்திய மக்கள் மற்றும் கட்சி தலைவர்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயக வெற்றி யாருக்கு என்ற கேள்விக்கு நாளை விடை கிடைக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் வாக்கு எண்ணிக்கை மற்றும் அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் தேர்தல் ஆணையத்தில் வழிகாட்டுதல்கள் குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் நேற்று (ஜூன் 2) இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகிய இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அவற்றின் முடிவுகள் அறிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கோரிக்கைகளை மனுவை அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, "பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் ஓட்டுகளை எண்ணி முடித்து அதன் அறிவுப்புகளை வெளியிட்ட பிறகே மின்னணு வாக்குகளை எண்ண வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது எனவும், ஆனால் தேர்தல் ஆணையம் அதில் தற்போது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது ஏற்கத்தகாதது எனவும் கூறினார்.

பொதுத் தேர்தலின் போது இதுவரை எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை மூன்று முறை சந்தித்து விட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், கடந்த ஆண்டுகளை விட இந்த தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலர் தபால் வாக்குப் பதிவில் இணைந்துள்ளதால் அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அபிஷேக் சிங்வி கூறினார். இதனால், தபால் வாக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கையெழுத்திட்ட மற்றொரு கடிதத்தில், வாக்கு எண்ணிக்கை மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து முகவர்களுக்கு அந்தந்த கட்சிகள் தீவிர பயிற்சி வழங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த போதுமான புரிதல் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்கட்சிகளின் கோரிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேர்தல் ஆணையம் அதன் வழிகாட்டுதல்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், EVMகளின் கண்ட்ரோல் யூனிட்டுகள் CCTV கண்காணிப்பின் கீழ் நகர்த்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள வாக்குப் பதிவு செலுத்தப்பட்ட தேதி மற்றும் நேரம் சரி பார்க்கப்படுவதும் இதற்குள் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது உறுதி செய்ய வேண்டியது மிகவும் கட்டாயம் எனக்கூறியுள்ள சீதாராம் யெச்சூரி, இல்லை என்றால் வாக்குச் சாவடியிலிருந்து வந்த அதே கண்ட்ரோல் யூனிட்தான் வாக்கு எண்ணும் மையத்திலும் உள்ளதா என்பதை உறுதி செய்ய நம்பகத்தன்மை உள்ள வேறு எந்த வழியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குப்பதிவு தொடங்குவற்கு முன்பும், அதன் முடிவு அறிவிப்பதற்கு முன்பும் தேர்தல் தேதி மற்றும் நேரத்தை கண்ட்ரோல் யூனிட் மூலம் தேர்தல் ஆணையம் சரி பார்க்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அந்த கடிதத்தில், வாக்குப்பதிவு முடிந்த உடன் EVM-ல் சீல் வைக்கப்படும்போது போடப்படும் குறிப்பு சீட்டுகளை வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கட்சி முகவர்களிடம் சரிபார்ப்புக்காக கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை வாக்குப்பதிவு தேதியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், முந்தைய தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளின்போது வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கட்சி முகவர்கள் குறிப்பு சீட்டுகளை காட்டமாறு வாக்கு எண்ணும் அதிகாரிகளிடம் கோரும்போது. அவர்கள், அதற்கான எழுத்துப்பூர்வ விதி அல்லது சுற்றறிக்கையை கோருவதாகவும், இது குளறுபடிகளுக்கு வழிவகை செய்யும் எனவும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், இதேபோன்ற பல கோரிக்கைகளை உள்ளடக்கிய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய இரண்டாவது கடிதத்தில், மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார், சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுகவின் டி.ஆர்.பாலு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசிய மாநாட்டு (என்சி) தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் கோரிக்கையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அவற்றின் முடிவுகள் அறிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான். மேலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கன், தனது X பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், தேர்தல் வேட்பாளர்களின் முகவர்கள், உதவி தேர்தல் அதிகாரிகளின் (ARO) மேஜைகளில் அனுமதிக்கப்படுவதில்லை என அதில் குற்றம் சாட்டி இருந்தார். அதற்கு பதில் அளித்திருந்த தேர்தல் ஆணையம், வேட்பாளரின் முகவர்கள் RO/ARO களின் மேஜைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது எனக்கூறியிருந்தது.

மேலும், அந்த கடிதத்தில், எதிர்கட்சிகள் தங்கள் முகவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை பகிர்ந்துள்ளது. அதில், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை உண்ணிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்ட படிவம் 17C தங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை வாக்கு எண்ணிக்கை இப்படித்தான் நடக்கும்! தேர்தல் முடிவுகளுக்கு தயாராகுங்கள்! - Election Counting Procedure

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.