ETV Bharat / bharat

மீண்டும் டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ஹரியானாவில் இணைய சேவை துண்டிப்பு!

Delhi Chalo Protest via Haryana: மீண்டும் டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக பேரணி அறிவித்துள்ள நிலையில், ஹரியானாவின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டு, 7 மாவட்டங்களுக்கு இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Feb 11, 2024, 3:55 PM IST

Updated : Feb 13, 2024, 2:07 PM IST

ஹரியானா: நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், விளைபயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் பிப்ரவரி 13ஆம் தேதி பேரணி நடத்த உள்ளனர். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதற்காக, ஹரியானாவைத் தாண்டியே விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல வேண்டும் என்பதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. மனோகர் லால் கட்டர் தலைமையிலான ஹரியானா அரசு, மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு பிப்ரவரி 13 வரை இணைய சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.

இதன்படி, மாநிலத்தின் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபடேபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (பிப்.11) காலை 6 மணி முதல் பிப்ரவரி 13 இரவு 11.59 மணி வரை இணையதள சேவை, பல்க் எஸ்எம்எஸ்கள், டாங்கில் சேவை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் சாதாரண வாய்ஸ் கால்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதனையொட்டி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இருசக்கர மற்றும் இதர வாகனங்கள் மாநிலத்தின் முதன்மை சாலைகளை அவசர நிலைக்கு மட்டும் பயன்படுத்துமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல், ஹரியானாவில் இருந்து பஞ்சாப் செல்லும் அனைத்து முதன்மை வழிகளும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும், பஞ்சாப்பில் இருந்து வரும் சாலைகளுக்கு அம்பாலா காவல் துறையினர் சீல் வைத்து உள்ளனர். மேலும், ஹரியானா - பஞ்சாப் எல்லையில் அம்பாலா காவல் துறையினர் மூன்றடுக்கு பேரிகாட் வைத்து, பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேநேரம், டெல்லி மற்றும் அமிர்தசரஸ் செல்லும் சாலைகள் பல இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், இதில் துணை ராணுவமும் பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: கேரளா தற்கொலை படை தாக்குதல் சதித் திட்டம்: ரியாஸ் அபூபக்கர் குற்றவாளி - சிறப்பு நீதிமன்றம்!

Last Updated : Feb 13, 2024, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.