டெல்லி: ஆண்டு தோறும் சவுதி அரேபியாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமியர்கள் குறிக்கோளாக கொண்டு இருக்கின்றனர். இந்த வருடமும் ஏறத்தாழ 18 லட்சம் மக்கள் இதுவரை ஹஜ் புனிதன் யாத்திரைக்காக சவுதி அரெபியா விரைந்துள்ளனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள உஷணம் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடும் வெயில் காரணமாக நாவறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகும் மக்கள் சுருண்டு விழுந்து உயிரிழக்கின்றனர்.
மெக்காவில் 51 புள்ளி 8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் தாங்காமல் புனித யாத்திரை மேற்கொண்ட 98 இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்திர ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவு செயலாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர், ஆண்டுதோறும் பெருவாரியான மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதில் சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக 98 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.
இந்தியர்கள் தவிர்த்து ஒட்டுமொத்தமாக சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை சென்றவர்களில் வெப்பம் தாங்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதாக தகவல் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் அலை வீசுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சவுதி அரேபியாவில் 0.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப அலை அதிகரித்து உள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்த கடும் வெப்ப அலை காரணமாக எகிப்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்துக்கு அடுத்த படியாக ஜோர்டான், இந்தோனேஷியா, ஈரான்ம் செனகல், துணிசியா, ஈராக் குர்திஸ்தான் பிராந்தியம் ஆகிய பகுதிகளிலும் கடும் வெப்ப அலை தாங்க முடியாமல் மக்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் மறுதேர்வுக்கு தடை விதிக்க முடியாது.. மருத்துவ கலந்தாய்வை தள்ளிவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! - NEET UG 2024 issue