டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மீண்டும் சாதாரண நிலை திரும்பத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக 11 ஆயிரம் முதல் தக்வல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள்தாக பிரதமர் மோடி கூறினார். மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் படிப்படையாக குறையத் தொடங்கி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
மணிப்பூரில் அனைத்து தரப்பு மக்களிடமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார். மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் காங்கிரஸ், தனது ஆட்சிக் காலத்தில் 10 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அங்கு நிறுவியதாக பிரதமர் தெரிவித்தார்.
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய அமைச்சர் பல வாரங்கள் தங்கி இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டதாகவும், தற்போது கூட வெள்ளம் பாதித்த மணிப்பூர் பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு தகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி கூறினார்.
வெள்ளம் பாதித்த மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், மணிப்பூரில் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் நடந்து கொள்பவர்களை எச்சரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். மணிப்பூரில் காங்கிரஸ் 10 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் அரசியலை தவிர்த்து மாநிலத்தில் மீண்டும் அமைதியை நிறுவ மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கக வேண்டும் என்பதை விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. கலவரத்தால் வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் அகதிகள் போல் தஞ்சமடைந்தனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை... நாடு கண்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு துயர சம்பவங்கள்! - Major Stampede Incidents in india