பூந்தி (ராஜஸ்தான்): பள்ளி சிறுமிக்கு சக மாணவரால் பாலியல் சீண்டல் அளிக்கப்பட்ட நிலையில், இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் பள்ளி சிறுமிக்கு அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாண்வன் அளித்த பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொல்லை செய்து கொண்டாதாக கூறப்படிகிறது. இது குறித்து மரணமடைந்த சிறுமியின் தந்தை அப்பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர், மரணமடைந்த சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்தனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியை, குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தொடர்ந்து இரண்டு நாளாக பாலியல் சீண்டல் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து அவரது பெற்றோர்களிடம் கூற நினைத்தும் அவமானத்தாலும் பயத்தாலும், கூறவில்லை எனக் கூறப்படுகிறது.
![தற்கொலை எதற்கும் தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-02-2024/20662198_sc.jpg)
தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் யாரிடமும் சொல்லாமல் விரக்தி அடைந்த மாணவி, அவளது வாழ்வை அவளே முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகாவீர் ஷர்மா கூறுகையில், "பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவன் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை அளிக்கப்படும்" எனக் கூறினார்.
இதனிடையே, அப்பகுதியில் பள்ளி மாணவிகள் மீது நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சகோதரிகளான பள்ளி மாணவிகள் இருவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
அதேபோல், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியில் உள்ள தோட்ட வீடு ஒன்றில் மாணவி ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, மேலும் ஒரு மாணவி பாலியல் சீண்டல் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா துப்பாக்கிச்சூடு; பாஜக எம்எல்ஏவுக்கு 11 நாள் போலீஸ் காவல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!