ETV Bharat / bharat

கால்வாயில் குளித்த தந்தை, மகன் உட்பட 4 பேர் சுழலில் சிக்கி பலி.. ஆந்திராவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! - AP BAPATLA RIVER DEATH - AP BAPATLA RIVER DEATH

four drowned in river: ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள ஆற்றின் கால்வாயில் குளித்தபோது தந்தை, மகன் உட்பட நான்கு பேர் சூழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலமடா கால்வாய்
நிலமடா கால்வாய் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 11:53 AM IST

பாபட்லா: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ஜகத்கிரி குட்டாவைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றுள்ளார். அங்குள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று உறவினர்களுடன் சேர்ந்து சூர்யலங்கா கடற்கரைக்கு செல்ல முடிவு செய்தனர்.

செல்லும் வழியில் பாபட்லா நகரின் புறநகர் பகுதியில் உள்ள நிலமடா கால்வாய் தெரிந்துள்ளது. அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு செல்லலாம் என நினைத்தவர்கள் தாங்கள் வந்த வண்டியை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் சுனில்குமாரின் 13 வயது மான் சன்னி, ஸ்ரீநாத் மற்றும் உறவினர் நந்துவின் மகன் பிட்டு மூவரும் கால்வாயில் இறங்கி குளித்துள்ளனர். பின்னர் ஸ்ரீநாத்தும், பிட்டுவும் குளித்துவிட்டு கரைக்கு திரும்பியுள்ளனர். சிறுவன் சன்னி மட்டும் டயர் ட்யூப்பை பிடித்துக்கொண்டு குளித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கால்வாயில் ஏற்பட்ட சூழல் சிறுவனை அடித்து சென்றுள்ளது. இதனை கண்ட சன்னியின் தந்தை சுனில்குமார் மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரும் கால்வாயில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் காப்பாற்ற சென்ற கிரண் (35), நந்து (35) இருவரும் ஆழத்தில் சிக்கி மாயமாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி மீனவர்கள் காணாமல் போனவர்களை தேடினர். அதனை தொடர்ந்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இறங்கி தேடுதல் வேட்டையில் இறங்கினர். சில மணி நேரம் கழித்து சுனில் குமார் மற்றும் சன்னியின் சடலங்கள் சுமார் 500 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இருவரது உடல்களை கண்டு சுனில் குமாரின் மனைவி கோட்டேஸ்வரி கதறி அழுதார். பின்னர் தொடர்ந்து மீட்பு குழுவினர் இரவு 7 மணி வரை கால்வாயில் இறங்கி தேடியும் நந்து, கிரண் ஆகியோரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை மேலும் இருட்டியதால் தேடுதல் பணியை கைவிட்டனர்.

நிலமடா கால்வாயில் குளிப்பது ஆபத்தானது: நிலமடா கால்வாய் செங்குத்தானது மற்றும் மிகவும் ஆழமானது. கடலில் இருந்து இந்த கால்வாய்க்கு தண்ணீர் செல்வதனால் கால்வாயில் நீர்ச்சுழல்கள் உருவாகின்றன. நீச்சல் வீரர்களால் கூட இந்த கால்வாயில் ஏற்படும் சூழல்களை சமாளிக்க முடியாத சூழலில் பொது மக்கள் குளிப்பது உயிருக்கு ஆபத்தானது என மீட்பு குழுவினர் எச்சரிக்கின்றனர். ஆனால், அந்த கால்வாய் அருகே எந்த எச்சரிக்கை பதாகைகளும் இல்லாததால் கோடை விடுமுறைக்கு இங்கு வருபவர்கள் ஆபத்தை உணராமல் கால்வாயில் இறங்கி குளிப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

கோடை விடுமுறைக்கு வந்த இடத்தில் தந்தை, மகன் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.