உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) நடத்தும் பிரிவு அதிகாரி (SO) மற்றும் உதவி பிரிவு அதிகாரி (ASO) பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில், ராஜ்பூர் மற்றும் தோய்வாலா பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வில் சிலர் மோசடியில் ஈடுபடுவதாக டூன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
தகவலின் பேரில், ராஜ்பூர் மற்றும் தோய்வாலாவில் உள்ள தேர்வு மையங்களில் போலீசார் நடத்திய சோதனையில், இரண்டு தேர்வு மையங்களிலும் உள்ள சர்வர் அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ரகசியமாக வயர்கள் இணைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர் என காவல் கண்காணிப்பாளர் சிங் தெரிவித்துள்ளார்.
பிரிவு அதிகாரி (SO) மற்றும் உதவி பிரிவு அதிகாரி (ASO) பதவிகளுக்கான தேர்வு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள CSIR ஆல் நடத்தப்படுகிறது. இது ஆன்லைனில் நடத்தப்படுவதால் தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு, கணினி மூலம் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் ராஜ்பூர் மற்றும் தோய்வாலா பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் உள்ள கணினிகளை மாஃபியாக்கள், ஒரு கணினி மையத்தில் இருந்து ஹேக் செய்து தேர்வர்களுக்கு பதிலாக கேட்க்கப்படும் கேள்விகளுக்கு பதலளித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டு தேர்வு மையங்களில் இருந்து தேர்வர்களுக்கு மோசடி செய்ய உதவிய நான்கு குற்றவாளிகளை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய கருவிகளை கைபற்றியுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் இரு நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் படி அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான அங்கித் மீது டெல்லி குற்றப்பிரிவில் ஏற்கனவே வழக்கு உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும்,கைது செய்யப்பட்ட குற்றவாளி அங்கித் திமான், மோஹித் மற்றும் தீபக் ஆகியோர் இந்த மையத்தை நடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
தேர்வர்களிடம் இருந்து பணம் பெற்று, சிஸ்டத்தை ஹேக் செய்து, வேறு ஒருவரால் தேர்வில் கேட்க்கப்படும் கேள்விக்கு பதலளிக்க படுகிறது என போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த மோசடிக்கு உதவிய மேலும் இரண்டு நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் கடந்த 5 ஆண்டுகளில் நாடு கண்டது" - மக்களவையில் பிரதமர் மோடி!