ETV Bharat / bharat

நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பீகாரில் கடும் வெள்ளப்பெருக்கு! - Flood in Bihar - FLOOD IN BIHAR

நேபாளத்தில் உள்ள ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோல் வடக்கு பீகார் எல்லையோர மாவட்டங்களிலும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோசி மற்றும் கந்தக் தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெல்சான்ட் வட்டாரத்தில் உள்ள மந்தர் அணையில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சீதாமாரியின் பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பீகார் மாநிலம் கத்ராவில் உள்ள பகுச்சி துணை மின்நிலையத்தை சூழ்ந்துள்ள வெள்ளம்.
பீகார் மாநிலம் கத்ராவில் உள்ள பகுச்சி துணை மின்நிலையத்தை சூழ்ந்துள்ள வெள்ளம். (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 2:26 PM IST

முசாபர்பூர்: நேபாளம், வடக்கு பீகாரில் பெய்து வரும் இடைவிடாத கனமழை காரணமாக அண்டையில் உள்ள பீகார் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீர்பூரில் உள்ள கோசி தடுப்பணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பீகாரின் பல பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இமயமலையை ஒட்டியுள்ள நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேபாளத்தில் உள்ள ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது.

இதேபோல் வடக்கு பீகார் எல்லையோர மாவட்டங்களிலும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோசி மற்றும் கந்தக் தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெல்சான்ட் வட்டாரத்தில் உள்ள மந்தர் அணையில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சீதாமாரியின் பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: டெல்லி மக்களுக்கு தரமான சாலை வசதி: ஆய்வில் இறங்கிய முதல்வர் அதிஷி!

முசாபர்பூரில் உள்ள கத்ரா பகுச்சி துணை மின் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அங்கிருந்து மின்சாரம் பெறும் பல ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்த பிறகு மீண்டும் மின் விநியோகம் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துணை மின் நிலையப் பொறியாளர் சுனில் குமார் கூறுகையில், "மின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் தண்ணீர் நுழைந்துள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கத்ரா வட்டாரத்தில் உள்ள 22 பஞ்சாயத்துகளில் எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் நிறுத்தப்படலாம். இதனால் சுமார் 43 ஆயிரம் மின் நுகர்வோர் பாதிப்பை சந்திக்க கூடும். துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மின்சாரம் துண்டிக்கப்படும்." என்றார்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்பூரில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "அரசு நிர்வாகம் சுறுசுறுப்பாக இல்லை. பாதிப்பு பகுதிகளை பார்க்க யாரும் வரவில்லை" என்றார். கோசி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பீகார் மாநிலத்தின் பல வடகிழக்கு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுபால் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சுபாலில் வசிக்கும் ஜோகிந்தர் மேத்தா என்பவர் கூறுகையில், "எங்கள் வீடுகள் தண்ணீரால் நிரம்பியுள்ளன. 1961-க்குப் பிறகு பெரிய வெள்ளத்தை இப்போது பார்க்கிறேன். எங்களை சந்திக்க இதுவரை யாரும் வரவில்லை" என்றார். இதேபோல் குடியிருப்புவாசி கூறுகையில், "நான் 1980 முதல் இந்த கிராமத்தில் இருக்கிறேன். வெள்ளம் காரணமாக வீடுகள் இடிந்துள்ளன. விவசாயத்திலும் நஷ்டத்தை எதிர்கொள்கிறோம்." என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.