சிந்துதுர்க்: மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி, கடற்படை தினத்தன்று 35 அடியில் மராட்டியப் போர் மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையானது பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று அடித்த பலத்த காற்றினால் அந்த சிலை இடிந்து விழுந்தது.
हे चित्र मराठी मनाला विचलीत करणारे आहे. श्रेयघेण्याची घाई.निवडणुकांचेराजकारण.आणि राष्ट्रीयकामात खाऊबाजीयामुळेच हे घडले. गद्दारांचे दिल्लीश्वर पुतळ्याची प्रतिष्ठापना करतात हीशिवरायानीच झिडकारले.
— Sanjay Raut (@rautsanjay61) August 26, 2024
सिधुदुर्ग जिल्ह्याचे पालकमंत्री सार्वजनिक बांधकाम मंत्री रवींद्र चव्हाण राजीनामाद्या! pic.twitter.com/sLMOhDo6BW
சிந்துதுர்க் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த சிலை காற்றினால் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநில அரசியல் அரங்கில் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், பொதுப்பணித்துறையினர் மற்றும் கடற்படை அதிகாரிகள் இன்று அந்த இடத்திற்குச் சென்று அதற்கான காரணத்தை ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், பலத்த காற்றினால் சிலை விழுந்து சேதமடைந்தது என்று கூறிய ஷிண்டே, மாநில அரசு இந்த சம்பவத்தின் காரணத்தை கண்டுபிடித்து, அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை மீண்டும் நிறுவும் என்றும் கூறினார்.
இடிந்து விழுந்த சிலை கடற்படையினரால் வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டதாகும். ஆனால், சம்பவத்தன்று மணிக்கு 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியாமல் சிலை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை, சிலை சேதமடைந்த காரணத்தை உடனடியாக விசாரிக்கவும், சிலையை சீர்செய்து விரைவில் மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்க, மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் கடற்படை ஒரு குழுவை நியமித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
#WATCH | Maharashtra: The podium where the statue of Chhatrapati Shivaji Maharaj at Sindhudurg Fort at Malvan town of Sindhudurg district, collapsed yesterday, seen covered up this morning. Latest visuals from the spot.
— ANI (@ANI) August 27, 2024
BJP leader Nilesh N Rane arrives at the location for… pic.twitter.com/8iBkJkpYaF
இதற்கிடையே, சிலையை கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) எம்பி சுப்ரியா சுலே மாநில அரசை வலியுறுத்தினார். அதுகுறித்து சுப்ரியா சூலே தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ''சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை இன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சிலையை அமைக்கும் பணி தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவர்களது அமைப்பு அனைத்து துறைகளாலும் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். சிலையின் தரம் ஏன் மோசமாக இருந்தது என்பதை கண்டுபிடிக்கவும், அது தொடர்பான பிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் முழுமையான விசாரணை அவசியம்'' என பதிவிட்டிருந்தார்.
சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில், ''நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, சிலை திறப்பு விழா மிக மோசமான முறையில் நடந்ததாக உணர்கிறேன். சத்ரபதி சிவாஜி மகாராஜ், தேர்தல் மற்றும் வாக்குகளுக்காக அவமதிக்கப்பட்டார். மோடியின் கைகளால் திறந்து வைக்கப்பட்டதை சத்ரபதி சிவாஜி விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது'' என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதற்கிடையே, சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் மீது சிந்துதுர்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி தொகுதி பங்கீடு நிறைவு!