டெல்லி: எக்ஸ் தள பயனர் ஒருவர் நடிகையும், பாஜக பிரமுகருமான கங்கனா ரனாவத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அப்புகைப்படத்தில் கங்கனா ரனாவத்துடன் இருப்பது கேங்க்ஸ்டர் அபு சலேம் என பதிவிட்டிருந்தார். பாஜக, கங்கனா ரனாவத்தை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதியில் நிறுத்தியுள்ளது.
பகிரப்பட்டு வரும் புகைப்படத்துடனான கூற்று குறித்து நடத்திய விசாரணையில், அந்த புகைப்படத்தில் இருந்த நபர் மார்க் மானுவல் என்ற பத்திரிகையாளர் என்பதை உண்மைக் கண்டறியும் குழு கண்டறிந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் தவறான கூற்றுடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
உரிமைகோரல்: எக்ஸ் பயனர் ஒருவர் கடந்த மே 28ஆம் தேதி கங்கனா ரனாவத் ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அந்நபர் கேங்க்ஸ்டர் அபு சலேம் என்று கூறி இருந்தார்.
பதிவின் தலைப்பு: “भक्तों की झाँसी की रानी ”
பதிவின் மொழி பெயர்ப்பு: “பக்தர்களின் ஜான்சி ராணி".
இடுகைக்கான இணைப்பு மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது:
விசாரணை: மேலும், விசாரணையைத் தொடங்கிய குழு, அந்த புகைப்படத்தின் ஸ்கிரீன்ஷாட்டை கூகுள் லென்ஸ் மூலம் இயக்கியதில், மேலும் பலர் ஒரே கூற்றுடனான அந்த புகைப்படத்தை பகிர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.
அத்தகைய இரண்டு X தள பதிவுகளை இங்கே, இங்கே காணலாம்.
மேலும் நடத்தப்பட்ட சோதனையில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி மார்க் மானுவல் தன் ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவை குழு கண்டறிந்தது. அந்தப் பதிவில் அதே புகைப்படம் நீண்ட தலைப்புடன் பதிவிடப்பட்டிருந்தது.
மானுவல் தனது பதிவில், “இந்த புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு கார் பகுதியில் உள்ள கோர்னர் ஹவுஸில் எடுக்கப்பட்டது, இன்று வெளியாகும் கங்கனாவின் ‘சிம்ரன்’ படத்தைக் கொண்டாடும் விதமாக ஷாம்பெயின் காலை உணவுடன் கொண்டாடப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
பதிவிற்கான இணைப்பு மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது:
குழுவானது மேலும் மார்க் மானுவலின் சுயவிவரத்தை (profile) சோதனை செய்ததில், அவர் ஹஃப்போஸ்ட் இல் (HuffPost) தலையங்க எழுத்தாளராக பணிபுரிந்தது தெரியவந்தது.
சுயவிவரத்தின் இணைப்பு இங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது:
இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட வார்த்தைகளை கூகுளில் தேடியபோது, 2017ஆம் ஆண்டு ஹஃப்போஸ்ட்டில் வெளியான அறிக்கையை குழு கண்டுபிடித்தது.
அந்த அறிக்கையின் தலைப்பு, “கங்கனா ரனாவத் தனது தனிப்பட்ட வாழ்க்கையை கவனத்தில் கொள்வதில் மிகவும் திறமையானவர் என்பதை உணர வேண்டும்”.
அறிக்கைக்கான ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது:
இதன் அடுத்தகட்ட விசாரணையில், வைரலான பதிவில் உள்ள நபரின் புகைப்படத்தை அபு சலேம் உடன் ஒப்பிட்டுப் பார்த்து, இருவருக்கும் உடல் அல்லது முக ஒற்றுமை இல்லை என்பதை குழு கண்டறிந்தது.
அதைத் தொடர்ந்து, கங்கனாவுடன் புகைப்படத்தில் காணப்பட்ட மார்க் மானுவல் என்ற பத்திரிகையாளர், கேங்க்ஸ்டர் அபு சலேம் என்று தவறாக அடையாளம் காணப்பட்டதாக குழு முடிவு செய்தது.
உரிமைகோரல்: அபு சலேம் உடன் கங்கனா ரனாவத் இருக்கும் புகைப்படம்
உண்மை: 2017ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இருப்பது அபு சலேம் அல்ல, மார்க் மானுவல்.
முடிவுரை: பல சமூக ஊடக பயனர்கள், நடிகையும், பாஜக பிரமுகருமான கங்கனா ரனாவத் ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அந்த நபர் அபு சலேம் எனும் கூற்றுடன் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படம் 2017க்கு முன் எடுக்கப்பட்டது என்றும், வைரலான அந்த புகைப்படத்தில் இருப்பவர் பத்திரிகையாளர் மார்க் மானுவல் என்றும் குழு தனது விசாரணையில் கண்டறிந்தது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தவறான கூற்றுடன் பகிரப்பட்டது.
குறிப்பு: இந்த கட்டுரை முதலில் சக்தி கலெக்டிவ்வின் ஒரு பகுதியாக பிடிஐ ஆல் வெளியிடப்பட்டு, ஈடிவி பாரத் ஊடகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.