டெல்லி: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவிக்கையில், “பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு பிச்சை எடுங்கள், இந்தியாவிற்கு பாரமாக இருக்க வேண்டாம்” என பேசிய வீடியோ சமூக ஊடக பயன்பாட்டாளர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில், பொது பேரணியில் முதலமைச்சர் யோகி பேசிய உரையின் குறிப்பிட்ட பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, தவறான கூற்றுடன் சமூக வலைtஹ்தளங்களில் பகிரப்பட்டிருப்பதை பிடிஐ உண்மை கண்டறியும் குழு (PTI Fact Check Desk) கண்டறிந்தது.
உரிமைகோரல்: முகநூல் (facebook) பயன்படுத்தும் நபர் ஒருவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து தெரிவித்த கருத்துடன், “பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு பிச்சை எடுங்கள், இந்தியாவிற்கு பாரமாக இருக்க வேண்டாம்” என பேசிய வீடியோ ஒன்றை கடந்த மே 17ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ பதிவின் தலைப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “பாகிஸ்தானுக்குச் சென்று அங்கே பிச்சை எடுங்கள், இந்தியாவிற்கு பாரம் கொடுக்க வேண்டாம், முஸ்லீம்களுக்கு அனைத்து இடஒதுக்கீடுகளும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்” என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இங்கே அதற்கான இணைப்பு மற்றும் கீழே அதன் ஸ்கிரீன் ஷாட் உள்ளது.
விசாரணை: பிடிஐ உண்மை கண்டறியும் குழு முதலில் வைரலான அந்த வீடியோவைப் பார்த்ததுவிட்டு, அந்த காட்சிகளில் ஒரு முரண்பாடு இருப்பதை கவனித்தது.
பின்னர், InVid Tool Search மூலம் வீடியோவை இயக்கி, அதில் பல கீ ஃப்ரேம்கள் (key frame) இருப்பதை கண்டுபிடித்தோம்.
அதில் ஒரு கீ ஃப்ரேமை எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் இயக்கி பார்த்தபோது, அதே வீடியோவுடனான ஒரே மாதிரியான உரிமைகோரல்களுடனான பல பதிவுகள் இருப்பதை குழு கண்டறிந்தது.
அத்தகைய மூன்று பதிவுகளை இங்கே பார்க்கலாம்.
இந்த வீடியோக்கள் X தளத்திலும் பகிரப்பட்டிருப்பதை இங்கே பார்க்கலாம்.
இது குறித்து மேலும் ஆய்வு செய்த போது, கடந்த மே 15ஆம் தேதி ஏபிபி கங்காவின் (ABP Ganga) அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவை பார்த்தோம்.
அந்த வீடியோ குறித்த விளக்கத்தில், “CM Yogi Mahoba Rally: महोबा में सीएम योगी ने एकदम बदल दिया पूरा माहौल | ABP GANGA” என போடப்பட்டிருந்தது.
இதனை மொழிபெயர்த்து பார்க்கையில், “சிஎம் யோகி மஹோபா பேரணி: சிஎம் யோகி மஹோபாவின் முழு சூழலையும் முற்றிலும் மாற்றினார். ஏபிபி கங்கா” என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவிற்கான இணைப்பு இங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட முதலமைச்சர் உரையின் அந்த சிறு கிளிப்பின் முழுமையான வீடியோ இது தான் என்பதை குழு கண்டறிந்தது.
இரண்டு வீடியோக்களின் காட்சிகளை ஒப்பிடும் ஒரு படம் கீழே உள்ளது.
உண்மையான வீடியோவை பார்த்துக்கொண்டிருந்த போது, அதில் 11:55 நிமிடங்கள் மற்றும் 18:54 நிமிடங்களில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு கிளிப்களை இணைத்து அந்த வைரல் வீடியோ உருவாக்கப்பட்டிருப்பதை குழு கவனித்தது.
அந்த வீடியோவின் 11:28 நிமிடத்தின் போது ஆதித்யநாத் சொல்லியிருப்பதாவது, “மோடி 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு, அவர்கள் வளமான வாழ்க்கையை வாழ வழிவகுத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களை விட அதிகமான மக்கள் நம் நாட்டில் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் தினமும் நடக்கும் போராட்டங்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஒரு கிலோ மாவுக்காக மக்கள் போராடுகிறார்கள். பாகிஸ்தானில் இந்த மாதிரியான வாட்டி வதைக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
பாகிஸ்தானை புகழ்ந்து பாடுபவர்களிடம் சொல்லுங்கள், நீங்கள் பாகிஸ்தானை மிகவும் நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏன் இந்தியாவுக்கு சுமையாக மாறுகிறீர்கள்? பாகிஸ்தானுக்குச் சென்று அங்கே ஒரு கிண்ணத்துடன் பிச்சை எடுங்கள்" என கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தனித்தனி கருத்துக்களும் இணைக்கப்பட்டு, ஆதித்யநாத் மதவாதக் கருத்தைத் தெரிவித்தது போல உருவாக்கப்பட்டுள்ளது.
எங்கள் விசாரணையின் போது, மே 15 அன்று வெளியிடப்பட்ட ஏபிபி லைவ் அறிக்கையையும் நாங்கள் கண்டோம்.
அந்த அறிக்கையின் தலைப்பு, “‘பாகிஸ்தானிற்குச் சென்று பிச்சை எடுங்கள், என்றால்...’; எதிர்கட்சியை ஆதித்யநாத்தின் கிண்டல்” என்றிருந்தது.
அறிக்கைக்கான இணைப்பு இங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது.
அந்த அறிக்கையில், “ உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த புதன்கிழமை காங்கிரஸ் மற்றும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டமைப்பினர் "பாகிஸ்தான் மீதான காதல்" என அவர்கள் பேசுவதற்காக அவர்களை சாடியதோடு, "பாகிஸ்தானுக்காக பேசுபவர்கள், பாகிஸ்தானை இவ்வளவு நேசிக்கிறீர்கள் என்றால், பிறகு ஏன் இந்த நாட்டிற்கு சுமையாக இருக்கிறீர்கள்? என அவர்களிடம் கேளுங்கள், அங்கு சென்று பிச்சை எடுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னரே, முதலமைச்சர் யோகி உரையின் சில பகுதிகள் வெட்டப்பட்டு, ஒன்றிணைக்கப்பட்டு தவறான கூற்றுகளுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது என்பதை குழு முடிவு செய்தது.
உரிமைகோரல்: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவிக்கையில், 'பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு பிச்சையெடுங்கள், இந்தியாவிற்கு பாரமாக இருக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.
உண்மை: முதலமைச்சர் யோகியின் உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த சூழலை உருவாக்கியுள்ளது.
முடிவு: உத்தரpபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து கருத்து கூறுகையில், 'பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு பிச்சை எடுங்கள், இந்தியாவிற்கு பாரமாக இருக்க வேண்டாம்' என்று கூறுவது போன்ற வீடியோவை சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் பலர் பகிர்ந்துள்ளனர். இது குறித்த விசாரணையில் முதலமைச்சர் யோகி உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு, தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பதை குழு கண்டறிந்தது.
குறிப்பு: இந்த கதை முதலில் சக்தி கலெக்டிவ்வின் ஒரு பகுதியாக PTI இல் வெளியிடப்பட்டு ஈடிவி பாரத் ஊடகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.