ETV Bharat / bharat

"டெல்லி போன்று காஷ்மீரை நடத்த முடியாது" புதிய அரசு எப்படி இருக்கும்? - ஒமர் அப்துல்லா பிரத்யேக பேட்டி - OMAR ABDULLAH

தேசிய மாநாடு கட்சி துணை தலைவர் ஒமர் அப்துல்லா, ஈடிவி பாரத் மிர் ஃபர்ஹாத்துக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒவ்வொருக்குமான அரசாக செயல்படுவோம் என உறுதியளித்துள்ளார்.

ஒமர் அப்துல்லா-ஈடிவி பாரத்துக்கு பேட்டி
ஒமர் அப்துல்லா-ஈடிவி பாரத்துக்கு பேட்டி (image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 4:28 PM IST

ஶ்ரீநகர்: பத்து ஆண்டுகள் கழித்து ஜம்மு-காஷ்மீருக்கு நடந்த தேர்தலில் தேசியமாநாடு கட்சிக்கு அபார வெற்றி கிடைத்திருக்கிறது. அதன் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். புட்காம், கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஓமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.

முஸ்லீம்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு மாவட்டங்கள் மற்றும் பீர்பாஞ்சல் மாவட்டத்தில் உள்ள ரஜோவ்ரி, பூஞ்ச் ஆகியவற்றில் தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஈடிவி பாரத்துக்கு எக்ஸ்க்ளூசிவ் ஆக ஓமர் அப்துல்லா அளித்த பேட்டியில், புதிய அரசு திங்கள் கிழமை பதவி ஏற்கும் என்றும் ஜம்மு மாவட்டத்தில் இருந்து பாஜகவின் 29 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற நிலையில் அந்த பகுதிக்கு பிரதிநித்துவம் அளிப்பது குறித்தும் பேசினார்.

ஈடிவி பாரத்: 2009ஆம் ஆண்டு நீங்கள் முதலமைச்சராக இருந்ததற்கும், இப்போது 2024ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

ஒமர் அப்துல்லா : இது ஒரு முழுமையான அரசல்ல. ஆனால், இதற்கு அதிகாரம் இல்லை என்பதல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான அதிகாரப்பட்டியல் பெரியதாக இருந்தது. ஆனால் மிகவும் முக்கியமாக இது ஒரு தற்காலிக அடிப்படையிலானது. மதிப்பிற்குரிய பிரதமர் (நரேந்திர மோடி) மற்றும் இதர மத்திய அரசின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தரப்படும் என்று கூறியிருக்கின்றனர். எனவே மிகவிரைவில் அது நடக்கும் என்று நாம் நம்புவோம்.

ஈடிவி பாரத்: மத்திய அரசுடன் மோதல் போக்கான உறவுதான் நீடிக்குமா?

ஒமர் அப்துல்லா: மோதல் போக்கான அரசாகவே இருக்கும் என்று நாம் எல்லோரும் என் கருதுகின்றோம் என்று தெரியவில்லை. அப்படி மோதல் போக்காக இருக்காது பொறுத்திருந்து பாருங்கள். ஜம்மு-காஷ்மீ் மோதல் போக்குடன் கூடிய அரசாக இருக்காது என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதே போன்றதொரு போக்கை டெல்லியில் இருந்தும் எதிர்பார்க்கின்றேன். மோதலோடு இருப்பதை நாங்கள் எதிர்நோக்கவில்லை. மோதல் போக்கானது ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்கானது என்று நான் நம்பவில்லை. மோதல் போக்குடன் நடந்து கொள்வதற்கு அவர்கள் வாக்களிக்கவில்லை. பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றனர். மோதல் போக்கான சூழலில் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாது.

ஈடிவி பாரத்: ஜம்மு மாவட்டங்களுக்கு பிரதிநித்துவம் அளிக்கப்படுமா?

ஒமர் அப்துல்லா: அவர்கள் இந்த அரசின் ஒரு பகுதி அல்ல என்று எப்படி உங்களால் சொல்ல முடியும்? இந்த அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டவர்களுக்கு மட்டும் இந்த அரசு சொந்தமானதல்ல. இந்த எல்லோருக்குமானது. பிரதமர் மோடிக்கு 140 கோடி மக்களும் ஓட்டுப்போடவில்லை. ஆனால், அவர்தான் இந்தியாவின் பிரதமர். ஆகவே, 1.4 கோடி மக்கள் ஜம்மு-காஷ்மீரில் இந்த கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்த அரசு ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒவ்வொருக்குமான அரசாகும். இந்த கருத்தில், இந்த அரசு ஶ்ரீநகரில் 70 % வாக்களிக்காதவர்களுக்காக இருக்காது என்பதல்ல. ஏனெனில் ஶ்ரீநகரில் 30 % பேர் மட்டுமே வாக்களித்தனர். அந்த 70 % பேர் அரசின் குரலாக இருப்பார்கள்.

ஈடிவி பாரத்: அமைச்சரவையில் ஜம்மு பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா?

ஒமர் அப்துல்லா: ஜம்மு பகுதி இந்த அரசின் குரலாக இருக்கும். எந்த விதமான குரலாக இருக்கும், எப்படி அந்த பிரதிநித்துவம் இருக்கும் என்றால், அதனை முதலமைச்சரின் முடிவுக்கு விட்டு விட வேண்டும். முதலமைச்சர்தான் இது குறித்து முடிவு எடுப்பார். ஆனால், ஜம்மு புறக்கணிக்கப்படாது.

ஈடிவி பாரத்: முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பது எப்போது?

ஒமர் அப்துல்லா: அடுத்தவாரம் தொடக்கத்தில் அரசு அமைக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள் கிழமை பதவி ஏற்பு நடக்கும்.

ஈடிவி பாரத்: உங்கள் பதவி காலத்தில் மாநில அந்தஸ்து கிடைக்குமா?

ஒமர் அப்துல்லா: அரசு பதவி ஏற்ற சில மாதங்களுக்குள் மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும். ஆறு மாதம் என்பது நீண்டகாலம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும். மதிப்பிற்குரிய பிரதமர், ஒரு பாஜக அரசுக்குத்தான் அல்லது பாஜக இடம் பெற்ற ஒரு அரசுக்கு மாநில அந்தஸ்து தர முடியும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. தொகுதி மறுசீரமைப்பு, தேர்தல்கள் மற்றும் மாநில அந்தஸ்து என்றும் பாஜக சொன்னது. அவர்கள் கூறிய படி இரண்டு நிலைகள் முடிவடைந்து விட்டது. இப்போது மாநில அந்தஸ்து மட்டுமே தரப்பட வேண்டும்.

ஈடிவி பாரத்: எளிதான அரசாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

ஒமர் அப்துல்லா: நீங்கள் டெல்லியுடன், காஷ்மீரை ஒப்பிட முடியாது. டெல்லி ஒரு போதும் மாநிலமாக இருந்ததில்லை. அது ஒரு இருவிதமான மாதிரி. யூனியன் பிரதேசம் மட்டுமின்றி டெல்லி, நாட்டின் தலைநகர். ஜம்மு-காஷ்மீர் தலைநகர் அல்ல. நாங்கள் மாநிலமாக இருந்திருக்கின்றோம். மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய தனித்தன்மையான நிலையில் நாங்கள் இருக்கின்றோம். எப்படிப் போகிது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.