டெக்சாஸ்: பிரதமர் மோடியை அவரது எக்ஸ் பக்கத்தில் 10 கோடி பின் தொடரும் நிலையில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் உலகத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிற அரசியல் தலைவர்களை பின் தொடர்பவர்களை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
இதையடுத்து எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், "உலகில் அதிக நபர்களால் பின் தொடரப்படும் தலைவர் ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி" என்று தெரிவித்துள்ளார்.
Congratulations PM @NarendraModi on being the most followed world leader!
— Elon Musk (@elonmusk) July 19, 2024
உலக தலைவர்களில் அதிகபட்சமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 3 கோடியே 81 லட்சம் பின் தொடர்பாளர்களுடனும், துருக்கி அதிபர் எடோகன் 2 கோடியே 15 கோடி பாலோயர்களுடனும் உள்ளனர். உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிக பின் தொடர்பாளர்களை கொண்ட பிரபலங்கள் வரிசையில் மோடி 7வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியை பின் தொடா்வோரின் எண்ணிக்கை சுமாா் 3 கோடி அதிகரித்துள்ளதாகவும், அரசின் தலைவா் என்ற அடிப்படையில், எக்ஸ் வலைதளத்தில் உலகிலேயே அதிகம் பேரால் பின் தொடரப்படும் தலைவராக பிரதமா் மோடி நீடிக்கிறாா். அவரைத் தொடர்ந்து துபாய் மன்னர் ஷேக் முகமது 1 கோடியே 12 லட்சம் மற்றும் போப் பிரான்சிஸ் 1 கோடியே 85 லட்சம் பின் தொடர்போரை கொண்டு உள்ளனா்.
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 2.64 கோடி பின்தொடர்வோர்கள் உள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் 2 கோடி 75 லட்சம் பேர், உத்தர பிரதேசம் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதசவ் 1 கோடியே 99 லட்சம் பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளனர்.
மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி 74 லட்சம் பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! குளறுபடிக்கு சாத்தியமா? - NEET UG 2024 Results