டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. டெல்லியில், இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் தேதிகளை அறிவிக்கவுள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியில் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிகிறது. ஜார்க்கண்ட் மாநில அரசின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது.