ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! - Assembly elections dates - ASSEMBLY ELECTIONS DATES

Four States Assembly Election dates: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றிற்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ANI

Published : Aug 16, 2024, 3:44 PM IST

டெல்லி: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதனை, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சந்து ஆகியோர் அறிவித்தனர். முன்னதாக, செப்டம்பர் 30, 2024-க்குள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்: 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் 74 பொது தொகுதிகளாகவும், 9 எஸ்டி மற்றும் 7 தனித் தொகுதிகளாகவும் உள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேநேரம், ஆகஸ்ட் 20, 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய நாட்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. 2024, ஜூலை 25 அடிப்படையில், மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஹரியானா சட்டமன்றத் தேர்தல்: ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சடமன்றத் தொகுதிகளில் 73 பொது தொகுதிகளாகவும், 17 தனித் தொகுதிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி நிறைவடைகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 2024 நிலவரப்படி, 2.01 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இங்கு 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல்! தேர்தல் தேதி எப்போ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.