ETV Bharat / bharat

செயற்கை நுண்ணறிவு சட்டத்தின் அவசியம் என்ன? திமுக எம்.பி பி.வில்சன் கூறுவது என்ன?

Regulating Artificial Intelligence: திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் நாடாளுமன்ற சிறப்பு உரையின் போது சட்டத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவை (AI) ஒழுங்குபடுத்துவதற்கான தேவை குறித்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 10:48 PM IST

டெல்லி: திமுக மாநிலங்களவை உறுப்பினரான பி.வில்சன் பாராளுமன்ற சிறப்பு உரையின் போது செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தனது X தளத்தில், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றத்தை வளர்ப்பதற்கும், தனிப்பட்ட விபரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு இடையேயான சம நிலையை உறுதிப்படுத்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக வேலை இழப்பு அபாயம் உள்ளது.

கட்டுப்பாடுகள் இல்லாமல் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது மனிதக் குலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தல் என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். இதனை அனைவரும் ஒன்று இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் போது அவற்றின் நேர்மறையான விளைவுகளைத் தெளிவாக ஆராய்ந்து அதன் அபாயங்களைச் சமாளிக்கக்கூடியதாக இருக்கும் போது மட்டுமே அரசு அனுமதி வழங்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்து ஒழுங்கு முறை அமைப்பை அரசே உருவாக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவின் கொள்கைகளை அதன் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் அதன் பயன்பாடுகளை வரையறுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு செயலிகள் பயன்பாடுகள் நேரடியாக மனிதர்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது எனவே அவற்றின் அவசியம் மற்றும் ஆபத்தை உணர்ந்து அதற்கான ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு - சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.