பெங்களூரு: பற்றவைத்த பட்டாசு மீது ஒரு பொருளை வைத்து அதன் மீது பந்தையத்திற்காக அமர்ந்த இளைஞருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தீபாவளி தினமான அக்டோபர் 31ஆம் தேதி பெங்களூருவின் கோனகுண்டே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீவர்ஸ் காலனியில் நடந்துள்ளது. பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்த உயிரிழந்த இளைஞரின் பெயர் சபரீஷ் என்பது தெரியவந்துள்ளது.
அக்டோபர் 31 இரவு, குடிபோதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், பட்டாசுகளை பற்ற வைத்துக் கொண்டே பெட்டியின் மீது ஒரு பெட்டியை வைத்து சபரீஷை உட்கார வைத்து சவால் விடுத்துள்ளனர். மது போதையில் இருந்த சபரீஷ், பட்டாசு வெடிக்கும் வரை அதன் மீது வைக்கப்பட்ட பொருளில் உட்கார்ந்தால், ஆட்டோ ரிக்ஷா கொடுக்க வேண்டும் என்று பந்தயம் கட்டினார்.
தொடர்ந்து, அதிக வெடிமருந்துகள் கொண்ட பட்டாசுகளை வைத்து, அதன்மீது ஒரு பொருளை வைத்து உட்கார்ந்த சபரீஷ், கீழே இருக்கும் பட்டாசுகளை நண்பர்களிடம் கொளுத்தும்படி சொன்னார். அனைவரும் மதுபோதையின் உச்சத்தில் இருந்த நிலையில், பட்டாசைக் கொளுத்திவிட்டு ஆரவாரத்துடன் அங்கிருந்து விலகி ஓடினர்.
ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்து, சபரீஷ் அந்தரங்க உறுப்புகளில் பெரும் தீக்காயங்கள் ஏற்பட்டது. இதனைப் புரிந்துகொண்ட அக்கம்பக்கத்தினரும், நண்பர்களும் உடனடியாக அவரை மீட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையும் படிங்க |
ஆனால், சிகிச்சைப் பலனின்று நவம்பர் 2 அன்று சபரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோனகுண்டே காவல்துறையினர் சபரீஷின் நண்பர்களான நவீன், தினகர், சத்யவேலு, கார்த்திக், சதீஷ், சந்தோஷ் ஆகிய 6 பேரைக் கைதுசெய்து செய்யப்பட்டுள்ளதாக தெற்குக் காவல் ஆணையர் லோகேஷ் பி ஜகலாசர் தெரிவித்தார்.
விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற முன்னோர் மொழிக்கு சான்றாகி இருக்கிறது இந்த துயரச் சம்பவம். எனவே, பட்டாசுகளை வெடிக்கும்போது, மக்கள் எப்போதும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது காவல்துறையின் கோரிக்கையாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.