ETV Bharat / bharat

அர்ஜூனா விருது பெற்ற முதலாவது பெண் குதிரையேற்ற வீரர்...திவ்யாகீர்த்தி சிங் ரத்தோரின் வெற்றி பயணம்! - DIVYAKRITI SINGH RATHORE

குடியரசு தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருது பெற்ற முதலாவது பெண் குதிரையேற்ற வீரர் என்ற பெருமையை திவ்யா கீர்ததி சிங் ரத்தோர் பெற்றுள்ளார்.

குடியரசு தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருது பெறும் திவ்யா கீர்ததி சிங் ரத்தோர்
குடியரசு தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருது பெறும் திவ்யா கீர்ததி சிங் ரத்தோர் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 4:45 PM IST

புதுடெல்லி: குடியரசு தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருது பெற்ற முதலாவது பெண் குதிரையேற்ற வீரர் என்ற பெருமையை திவ்யா கீர்ததி சிங் ரத்தோர் பெற்றுள்ளார்.

முதலில் ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அனைத்திலும் இந்திய பெண்கள் சாம்பியன்களாக வெற்றி பெறுகின்றனர் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதிரையேற்ற பிரிவில் பங்கேற்ற திவ்யாகீர்த்தி சிங் ரத்தோர் அதில் தங்கப்பதக்கம் வென்றார். எனவே அவரை இந்திய விளையாட்டு ஆணையம் அர்ஜூனா விருதுக்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து ஜெய்ப்பூரை சேர்ந்த திவ்யாகீர்த்தி சிங் ரத்தோர், முதலாவது பெண் குதிரையேற்ற வீரர் என்ற வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றார்.

சீனாவின் ஹாங்சோவில் சாம்பியன்ஷிப் ஆன பிறகு இந்தியா திரும்பி தமது பெற்றோரை சந்தித்தார். ஜெர்மனியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்த பின்னர் அ்ப்படியே அவர் சீனா சென்று விட்டார். ஜெய்ப்பூரில் பெற்றோரிடம் இருந்தபோது அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவர் மதிப்பு மிக்க அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து பேசிய அவர், "இது தனிப்பட்ட வெற்றி அல்ல. இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது என்று நினைக்கிறேன். எனது வெற்றியானது இந்த துறையில் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கும் மற்ற பெண்களை குதிரையேற்றத்தில் சாதனை படைக்க தூண்டும் என்று நான் நம்புகிறேன்,"என்றார்.

குதிரைகளை நேசிக்கும் குடும்பத்தில் பிறந்தவர் திவ்யா கீர்த்தி. அவரது தாய் வழி தாத்தாவும், அவரது கணவர் வழியிலான தாத்தாவும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். "எங்கள் குடும்பத்தில் 80 குதிரைகளை பராமரித்து வருகின்றோம். மேலும் போலோ மைதானங்களை பராமரித்து வருகின்றோம். என்னுடைய தந்தையின் குழுவினர் பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்," என்றார் திவ்யா கீர்த்தி.

முதல் குதிரையேற்றம்: ஜெய்ப்பூரில் உள்ள தமது பரம்பரைக்கு சொந்தமான 450 ஆண்டுகள் பழையான முண்டோடா அரண்மனையில் முதன்முதலாக திவ்யா கீர்த்தி குதிரையேற்றம் செய்துள்ளார். இது பற்றி கூறிய அவர், "இதுதான் என் வாழ்க்கையை வடிவமைத்தது. குதிரைகள் மீதான அன்பை உணர ஆரம்பித்தேன்,"என்றார். அஜ்மீரில் மாயோ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, குதிரையேற்றம் செய்வதை தமது கூடுதல் திறனாக கற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய மு.க.ஸ்டாலின்!

பல ஆண்டுகளாக குதிரையேற்றத்தில் ஈடுபட்டு வந்த திவ்யா கீர்த்தி, டெல்லியில் நடைபெற்ற குதிரை கண்காட்சியில் குதிரைக்கு ஆடை அணிவிப்பதில் முதல் விருதைப் பெற்றார். அவர் குதிரையேற்றம் செய்த குதிரையின் பெயர் சேட்டக் என்பதாகும். குதிரையுடன் நடனமாடுதல் என்றும் இது ஒப்பிடப்படுகிறது.அவரது ஆரம்ப காலகட்டங்களில் இது முதலாவது வெற்றியாகும்.

தோல்வியில் கற்றுக் கொண்டார்: கல்லூரி காலகட்டங்களில் அமெரி்ககாவின் புளோரிடா, ஜெர்மரி, பெல்ஜியம், ஆஸ்திரியா, பிரான்ஸ், ஐரோப்பா ஆகிய நாடுகளில் பல்வேறு தேச, சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவ்வளவு அனுபவங்கள் இருந்தும் கூட 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெறுவதில் தோல்வியடைந்து விட்டார். "சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றதை விடவும், தோல்வி அடைந்த போட்டிகளில் இருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன்," என்றார்.

சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், மேலும் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக திவ்யாகீர்த்தி 2020ஆம் ஆண்டு டென்மார்க் சென்றார். இது குறித்து பேசிய அவர், "என்னுடைய குதிரையுடன் நான் நட்பு கொண்டேன். எங்களுக்கு இடையேயான பிணைப்பு வலுவாக இருந்தது. குதிரையும், நானும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டோம். கோவிட்-19 தொற்று காலத்தில் அந்த புதிய நாட்டில் நீண்ட நாட்களாக இருக்க நேர்ந்தது. இந்தியாவுக்கும் திரும்ப இயலவில்லை. அந்த நேரத்தில் குதிரையுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. குதிரைகளிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவை வெறுமனே விலங்குகள் மட்டும் அல்ல. அவை நமது உணர்வுகளை புரிந்து கொள்கின்றன. அவற்றின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். குதிரை களைப்பாக இருக்கும் தருணத்தில் மேலும் பயிற்சியில் ஈடுபட விரும்பாது என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன்," என்றார்.

தங்கப்பதக்கம்: சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகளின் போது வெற்றி மேடையில் நின்ற தருணம் குறித்து கூறிய அவர், "அந்த தருணத்தில் முழுமையாக பெருமையாக உணர்ந்தேன். தேசிய கீதத்தின் இசை ஒலித்த போது ஒரு இந்தியராக நான் பெருமை கொண்டேன். எங்கள் அனைவருக்கும் மேலே உயரத்தில் தேசிய கொடி பறந்தது. இந்தியாவுக்காக முதன்முதலாக ஒரு பெண் என்ற வகையில் குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வென்றது ஒரு வரலாற்று தருணமாக இருந்தது. மேலும் நாற்பது ஆண்டுகள் கழித்து குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு விருது கிடைத்ததும் பெருமையாக இருந்தது," என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக திவ்யாகீர்த்தி ஜெர்மனியில் பயிற்சி பெற்றார். "2023ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காகவே அங்கு நான் பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சி மையத்தில்தான் ஐரோப்பியாவில் உள்ள பல்வேறு குதிரையேற்ற வீரர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர். அங்கு பயிற்சி பெற்ற பலர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்.

"எனக்கு இந்தியாவில் இருந்து உற்சாகமான ஆதரவு கிடைத்தது. 2023ஆம் ஆண்டு என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாகும். இந்த ஆண்டில்தான் சவுதி குதிரையேற்ற பெடரேஷன் நடத்திய போட்டி, ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றேன். மேலும் எனக்கு இந்திய அரசின் பெருமை மிக்க அர்ஜூனா விருதும் கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிகள் எனது விளையாட்டில் மேலும் சிறந்து விளங்குவதற்கான பொறுப்பை எனக்கு நினைவூட்டுகின்றன,” என்று அவர் உற்சாகமாக கூறுகிறார். இப்போது அவர், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.