ETV Bharat / bharat

டெல்லி யுபிஎஸ்சி கோச்சிங் சென்டர் சம்பவத்திற்கு யார் காரணம்? போலீசாரும், மாணவர்களும் கூறுவது என்ன? - Delhi IAS Coachig centre Flood

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 2:32 PM IST

டெல்லியில் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து 2 மாணவிகள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் குறித்து தகவல் தெரிவித்ததும் காவல் துறையும், மீட்பு படையும் விரைந்து இருந்தால் உயிரிழப்புக்கு வாய்ப்பே ஏற்பட்டு இருக்காது எனக் கூறி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Screengrab from the video (X@Hirdesh79842767)

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் இயங்கி வரும் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் வெள்ள நீர் புகுந்தது. யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் வெள்ள நீரை கண்டு அதிர்ச்சி அடைந்து பயிற்சி மையத்தை விட்டு வெளியேற முயற்சித்து உள்ளனர்.

அதற்குள் பயிற்சி மையம் முழுவதும் வெள்ள நீர் சூழந்து கொண்டதாக கூறப்படுகிறது. பயிற்சி மையத்தை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது குறித்து மாலை 6.40 மணிக்கு போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு சக மாணவர்கள் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரவு 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு மீட்பு பணிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

அதற்குள் பயிற்சி மையம் முழுவதும் மழை நீர் நிரம்பி வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெறும் 10 நிமிடங்களில் பயிற்சி மையத்தின் தரைதளம் மூழ்கியதாக மாணவர்கள் கூறுகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி மையத்தில் புகுந்த நீரை மோட்ர் மூலம் உறிஞ்சு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர் மீட்பு பணியில் மூன்று மாணவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டு மாணவிகள் உள்பட மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசர் அனுப்பி வைத்தனர். மேலும் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 14 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மூன்று மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த மாணவர்கள் உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா யாதவ், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நிவின் டால்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பயிற்சி மையத்தில் தண்ணீர் புகுந்தது தொடர்பான 18 விநாடி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. சம்பவம் தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார், தனியார் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், பயிற்சி மையத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் ஆம் ஆத்மி அரசின் கவனக் குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் திடீர் வெள்ளம்! இரண்டு மாணவிகள் உள்பட 3 பேர் பலி! என்ன நடந்தது? - Delhi IAS Coachig centre Flood

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.